பாலாறு (காவிரியின் துணை ஆறு)
பாலாறு என்பது தென்னிந்தியாவில் உள்ள ஒரு ஆறு ஆகும். இது காவிரியின் துணை ஆறுகளில் ஒன்று.[1] காவிரி ஆறானது தமிழகத்துக்குள் நுழைந்ததும் அதனுடன் முதலில் கலக்கும் ஆறு இதுவாகும். இந்த ஆறு ஈரோடு மாவட்டம், ஈரெட்டியூர் அருகே உள்ள மலைப் பகுதியில் சிற்றாறாக உருவாகி, தன் பாதையில் உள்ள நீரோடைகள் பலவற்றை தன்னோடு இணைத்துக்கொண்டு தமிழக கர்நாடக எல்லைவழியாக பாய்கிறது. இந்த ஆறு பாயும் பகுதியானது வனப்பகுதியும், மலையடிவாரப் பகுதியும் உள்ள பகுதியாக இருப்பதால், இந்த ஆற்றின் வழியாக ஆண்டுதோறும் கணிசமான நீர் காவிரிக்கு கிடைக்கிறது. குறிப்பாக தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைக் காலங்களில் இந்த ஆற்றில் நீர்வரத்து மிகுந்து இருக்கும். பாலாறு காவிரியை நெருங்குவதற்கு சில கிலோ மீட்டர் முன்பாக சுமார் அரை கிலோ மீட்டர் அகலம் கொண்ட ஆறாக அகன்று பாய்கிறது. இந்த ஆறானது காவிரி ஆற்றுடன் கலக்கும் இடமானது மேட்டூர் அணையின் நீர்தேக்கப்பகுதியான அடிபாலாறு என்ற பகுதியாகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தியாகு (21 செப்டம்பர் 2016). "காவிரி வரலாறு". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 18 திசம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "கைகொடுக்காத பருவமழையால் நீரின்றி வறண்ட பாலாறு காவிரியிலும் நீர்வரத்து சரிவால் விவசாயிகள் வேதனை". இந்து தமிழ்: 4. திசம்பர் 18 2018.