1991 தமிழருக்கெதிரான கருநாடகக் கலவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1991 தமிழருக்கெதிரான கருநாடகக் கலவரம்
Part of காவிரி நீர்ப் பிணக்கு
[[File:Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Karnataka" does not exist.|250px|alt=|]]
இடம் பெங்களூர், மைசூர் (தென் கருநாடகம்)
நாள் திசம்பர் 12–13, 1991
தாக்குதலுக்கு
உள்ளானோர்
தமிழர்
இறப்பு(கள்) 18

1991 தமிழருக்கெதிரான கருநாடகக் கலவரம் என்பது கருநாடக அரசு தமிழ்நாட்டுடன் காவிரி ஆற்று நீர்ப் பிணக்கு தொடர்பில் வன்முறையைக் குறிக்கும். இது திசம்பர் 12–13, 1991 காலப்பகுதியில் தென் கருநாடகப் பகுதியில் குறிப்பாக பெங்களூர், மைசூர் நகரங்களில் இடம் பெற்றது. இந்திய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட காவிரி நீர் நீதிமன்ற ஆணைக்கெதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை தாக்குதல் நடத்தியோர் ஆரம்பித்தனர். இதனால் தென்கருநாடகப் பகுதியில் இருந்த தமிழர்கள் வெளியேறுமாறு வன்முறை தீவிரமடைந்தது. தமிழ்நாட்டின் எல்லையில் இருந்த கருநாடக நிலவுடமையாளர்கள் மீது பழிவாங்கல் நடந்ததாக குறிப்பிடப்பட்டது. கருநாடக அரசின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரம் பதினெட்டுப்பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்க, சுயாதீன அறிக்கைகள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பதினெட்டுப்பேருக்கு மேல் என்றது.[1]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Nair, p 259

உசாத்துணை[தொகு]