தொட்டல்லா ஆறு
Appearance
(தொட்டல்லா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தொட்டல்லா ஆறு (Doddahalla River) என்பது காவிரி ஆற்றின் துணை ஆறாகும். இந்த ஆறானது கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வனச்சரகத்தில் உள்ள குந்துகோட்டை மலைப்பகுதியில் காட்டாறாக தோன்றுகிறது. பெரும்பாலும் இந்த காட்டாற்றில் தென்மேற்கு பருவ மழைக் காலத்தில் வெள்ளம் ஏற்படுகிறது. இந்த ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதியானது அஞ்செட்டி, உரிகம் ஆகிய இரண்டு வனச்சரகங்களில் உள்ள சுமார் 55 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு ஆகும்.[1] இந்த இரு வனச்சரகங்களின் இடையே சுமார் 46 கி.மீ. நீளம் தொட்டல்லா காட்டாறு பாய்ந்து ஒகேனக்கலுக்கு முன்பாக 15 கி.மீ தொலைவில் உள்ள ராசிமணல் அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த ராசிமணல் பகுதியில் ராசிமணல் தொட்டல்லா ஆறு அணைகட்டு என்ற திட்டத்தின்படி அணைகட்ட முடிவு செய்து 1961ல் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் திட்டம் நிறைவேற்றபடவில்லை.[2]
குறிப்புகள்
[தொகு]- ↑ ஓசூர் அருகே தொட்டல்லா காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு: தடுப்பணை அமைத்துத் தண்ணீரைச் சேகரிக்க விவசாயிகள் கோரிக்கை, இந்து தமிழ் 2020 செப்டம்பர், 3
- ↑ "காமராஜரின் நிறைவேறாத கனவுகளில் ஒன்றான ராசிமணல் தொட்டல்லா ஆறு அணைகட்டு திட்டம், தினகரன். பாரத்த நாள் 2020 செப்டம்பர் 4". Archived from the original on 2020-07-22. பார்க்கப்பட்ட நாள் 2020-09-04.