குடவாசல் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குடவாசல் வட்டம் , தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக குடவாசல் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 63 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]குடவாசல் ஊராட்சி ஒன்றியம், கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியம் மற்றும் குடவாசல் கோணேசுவரர் கோயில் இவ்வட்டத்தில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 203,157 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 101,552 ஆண்களும், 101,605 பெண்களும் உள்ளனர். 52,370 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 89.6% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 83.27% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,001 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 19507 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 967 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 67,811 மற்றும் 156 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 87.61%, இசுலாமியர்கள் 7.18%, கிறித்தவர்கள் 5.01% மற்றும் பிறர் 0.19%ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குடவாசல்_வட்டம்&oldid=2725884" இருந்து மீள்விக்கப்பட்டது