வலங்கைமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வலங்கைமான்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவாரூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எல். நிர்மல் ராஜ் இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை 11 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

வலங்கைமான் (ஆங்கிலம்:Valangaiman), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,285 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். வலங்கைமான் மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வலங்கைமான் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மகாமாரியம்மன் கோயில்[தொகு]

வலங்கைமான் வரதராஜன்பேட்டையில் மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த மாரியம்மனைப் பற்றி ஓர் அற்புத வரலாறு வழங்கப்பட்டுவருகிறது. வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் காதக்கவுண்டர் என்பவர் வசித்துவந்தார். அவர் மனைவி கோவிந்தம்மாள். இருவரும் இறைபக்தி மிக்கவர்கள். காதக்கவுண்டர் விவசாய வேலை பார்த்துவந்தார். அவர் மனைவி பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்று தின்பண்டங்கள் விற்கும் வியாபாரம் செய்துவந்தார். அவரால் புங்கஞ்சேரி என்ற கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையை 'சீதளா' என்று பெயரிட்டு வளர்த்துவந்தார்., வைசூரி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை இறந்துவிட்டது. மாரியம்மனே குழந்தை வடிவில் வந்ததாக இத்தம்பதியரின் கனவில் தோன்றி ஒரு நாள் அருள் வாக்கு கிடைத்ததால் குழந்தையை நல்லடக்கம் செய்த இடத்திலேயே பிற்காலத்தில் கோயில் எழுப்பப்பட்டது. மற்ற சிவாலயங்களில் உள்ள சிவபெருமான் திருவுருவில் இடது கையில் மான் இருக்கும். ஆனால் வலங்கைமானில் உள்ள சிவபெருமான் திருவுருவில் வலது கையில் மான் இருப்பதால் இவ்வூருக்கு வலங்கைமான் என்று பெயர் வந்ததாகச் சிலர் கூறுவர். சீதையின் விருப்பத்தினால் மாயமானை இராமபிரான் துரத்திச் சென்றபோது, அம்மான் அங்கு வலது புறமாக ஓடியதால் வலங்கைமான் என்று இவ்வூருக்குப் பெயர் வந்ததாகச் சிலர் கூறுவர். ஆவணி, பங்குனி ஆகிய இரு மாதங்களிலும் வலங்கைமான் மாரியம்மனுக்கு திருவிழா நடைபெறுகின்றது. பதினைந்து நாட்கள் விழா நடைபெறும். எட்டாம் நாள் பிரசித்தி பெற்ற பாடைத் திருவிழாவும் (பங்குனி மாதம் இரண்டாம் ஞாயிறு), ஒன்பதாம் நாள் மீன் திருவிழாவும், பதினைந்தாம் நாள் புஷ்பப் பல்லக்கும் (பங்குனி மாதம் மூன்றாம் ஞாயிறு) சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறுகின்றன.[5]

அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி[தொகு]

இந்த பள்ளியானது வட்டாரத்திலேயே மிகவும் பழமையானது. 1932ம் ஆண்டு இப்பள்ளியில் ஒரு கட்டிடம் திறக்கப்பட்டதற்கான கல்வெட்டு இருந்ததாக அப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முதுகலை ஆசிரியர் திரு.தமிழ்ச்செல்வம் அவர்கள் தெரிவித்தார்கள்.

பிரபலங்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  5. மகாமகம் சிறப்பு மலர் 2004
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலங்கைமான்&oldid=2208604" இருந்து மீள்விக்கப்பட்டது