வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வலங்கைமான் சங்கரநாராயண ஸ்ரீநிவாஸ சாஸ்திரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரி
Vssrinivasasastri.jpg
1940களில் வலங்கைமான் சங்கரநாராயண ஸ்ரீநிவாஸ சாஸ்திரி
தென்னாப்பிரிக்காவுக்கான இந்தியத் தூதர்
பதவியில்
சூன் 1927 – சனவரி 1929
அரசர் ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ்
தலைமை ஆளுநர் இர்வின் பிரபு
முன்னவர் எவருமில்லை
பின்வந்தவர் கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு
இந்திய அரசுப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1920–1925
அரசர் ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ்
தலைமை ஆளுநர் ரூஃபுசு ஐசாக்சு
இந்திய அரசமைப்புப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1916–1919
அரசர் ஐந்தாம் ஜோர்ஜ்
தலைமை ஆளுநர் பிரடெரிக் தேசிகெர்
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 22, 1869(1869-09-22)
வலங்கைமான், தஞ்சாவூர் மாவட்டம்
இறப்பு 17 ஏப்ரல் 1946(1946-04-17) (அகவை 76)
மயிலாப்பூர், சென்னை
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு (1908–1922),
இந்திய லிபரல் கட்சி (1922–1946)
வாழ்க்கை துணைவர்(கள்) பார்வதி
படித்த கல்வி நிறுவனங்கள் கும்பகோணம் உயர்நிலைப் பள்ளி
கும்பகோணம் அரசுக் கல்லூரி
தொழில் கல்வியாளர், பேச்சாளர், எழுத்தாளர், அரசியல்வாதி, தூதுவர்
சமயம் இந்து

வலங்கைமான் சங்கரநாராயண ஸ்ரீநிவாஸ சாஸ்திரி (V. S. Srinivasa Sastri, 22 செப்டெம்பர் 1869 – 17 ஏப்ரல் 1946). இவர் இந்திய அரசியல்வாதியாகவும், நிர்வாகியாகவும், கல்வியாளராகவும் இருந்தார். ஆங்கில மொழி மீது உள்ள புலமைக்காகவும் மற்றும் சொற்பொழிவுகளுக்காகவும் மிகவும் பாராட்டப்பட்டார்.[1] பிரிட்டனில் 1916 – 1919ல் ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் பாராட்டப்பட்ட பெருமைக்குரிய சாஸ்திரிக்கு, "ரைட் ஹானரபில்" என்ற பட்டத்தை ஆங்கிலேயர்கள் வழங்கினர்.

வரலாறு[தொகு]

1869 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ம் நாள் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள வலங்கைமான் கிராமத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். சங்கரநாராயண சாஸ்திரியின் மூத்த குமாரர் இவர். பி.ஏ. தேர்வில் மாகாணத்தில் முதலிடம் பெற்று, சட்டக் கல்வி பயில பணமின்மையால் சென்னை சைதாப்பேட்டையிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பணியில் சேர்ந்தார். பிறகு பல பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றியபின் சென்னை ஹிந்து மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரானார்.[2]

படைப்புக்கள்[தொகு]

  • Speeches and writings of the Right Honourable V. S. Srinivasa Sastri
  • Letters of Right Honourable V.S. Srinivasa Sastri: With Some Letters of Rt. Hon. E.S. Montagu and Gandhi-Sastri
  • My Master Gokhale: A Selection from the Speeches and Writings of V. S. Srinivasa Sastri

மேற்கோள்கள்[தொகு]

  1. "He did the English language proud". The Hindu. பார்த்த நாள் 30 நவம்பர் 2013.
  2. ttp://bsubra.wordpress.com/category/shasthri/

வெளியிணைப்புகள்[தொகு]