குடவாசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குடவாசல்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவாரூர்
வட்டம் குடவாசல் வட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரி கிருஷ்ணன், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

14,639 (2011)

976/km2 (2,528/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 15 சதுர கிலோமீட்டர்கள் (5.8 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/kodavasal

குடவாசல் (Kodavasal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்திலுள்ள, குடவாசல் வட்டம் மற்றும் குடவாசல் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் இடமும், ஒரு பேரூராட்சியும் ஆகும். இங்கு குடவாசல் கோணேசுவரர் கோயில் உள்ளது.

அமைவிடம்[தொகு]

குடவாசல் பேரூராட்சி, திருவாரூரிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள தொடருந்து நிலையம், 10 கிமீ தொலைவில் உள்ள கொரடாச்சேரியில் உள்ளது. இதனைச் சுற்றிய நகரங்கள், நன்னிலம் 15 கிமீ; பாபநாசம் 22 கிமீ; கும்பகோணம் 22 கிமீ; திருவாரூர் 18 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

15 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 92 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3719 வீடுகளும், 14639 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6][7]

குடவாசல் கோணேசுவரர் கோயில்[தொகு]

சைவதிருமறை தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் மொத்தம் 276ல், காவிரியின் தென்கரையில் உள்ள 128 தலங்களில் 94வது திருத்தலமாக விளங்குவது குடவாசல். கோச் செங்கட் சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் மேற்கு நோக்கிய வாயிலைப் பெற்றுள்ளதால் குடவாயில் என்னும் பெயர் பெற்றதாகவும் ஓர் வரலாறு.

குடவாசலில் ஊரின் நடுவே அமைந்துள்ள இக்கோயிலின் இறைவரது திருப்பெயர் கோணேசுவரர். சூரியேசுவரர், தாலப்பியேசுவரர், பிருகுநாதர் என பல பெயர்களுமுண்டு. இறைவியாரது திருப்பெயர் பெரியநாயகி. மேற்கு நோக்கிய சந்நிதி அமைந்துள்ள இக் கோயில் புதுப் பொலிவுடன் காட்சியளிக்கின்றது. இக் கோயிலுக்கு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. மேற்புறத்தில் பஞ்ச மூர்த்திகள் உருவங்கள் வண்ணச்சுதையில் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. உள் நுழைந்ததும் செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர் சந்நிதி, பலிபீடம், நந்தி உள்ளன. இடப்பால் பெரியநாயகி சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. குடவாசல் பேரூராட்சியின் இணையதளம்
  5. http://www.townpanchayat.in/kodavasal/population
  6. Kodavasal Population Census 2011
  7. Kodavasal Town Panchayat
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடவாசல்&oldid=3205428" இருந்து மீள்விக்கப்பட்டது