கூத்தாநல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கூத்தாநல்லூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவாரூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் இ. ஆ. ப. [3]
நகராட்சி தலைவர் ஜெயராஜ்
மக்கள் தொகை

அடர்த்தி

22,995 (2001)

1,868/km2 (4,838/sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 12.31 square kilometres (4.75 sq mi)


கூத்தாநல்லூர் (ஆங்கிலம்: Koothanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22995 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.இவர்களில் 10846 ஆண்கள், 12149 பெண்கள் ஆவார்கள். கூத்தாநல்லூர் மக்களிள் கல்வியறிவு பெற்றோர் 16910 ஆகும், இதில் ஆண்கள் 8485 பெண்கள் 8425 ஆவார்கள். கூத்தாநல்லூர் மக்கள் தொகையில் 2947 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஊர் வரலாறு[தொகு]

சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் 'சின்னக் கூத்தன்', 'பெரிய கூத்தன்' என்ற இரு பெருநிலக்கிழார்களால் ஆளப்பட்டு வந்த "கூத்தனூர்" என்ற மிகச்சிறிய ஊர். வேளாண்மைத் தொழிலில் மிகவும் சிறப்புற்று விளங்கியது. நாளடைவில் பல்வேறு ஊர்களிலிருந்து இங்கு குடியேறிய நமது முன்னோர்களால், "நல்லூர்" என்ற வார்த்தையையும் ஊரின் பெயரோடு சேர்த்து "கூத்தாநல்லூர்" எனும் அழகிய பெயரினைச் சூட்டினார்கள். பின்னாளில் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் பிழைப்புத் தேடி (விவசாயம்-பயிர் தொழில்) பல இஸ்லாமியக் குடும்பங்கள் இவ்வூரில் வந்து குடியேறினார்கள். சிலர் மார்க்கக் கல்விக்காகவும், வியாபாரம் செய்வதற்காகவும் இவ்வூரை நாடிக் குடியேறினார்கள். அதனால் ஊர் பெரிதாக வளர்ந்தது. அவ்வாறு வந்த குடும்பங்கள் எல்லாம் ஒன்றிணைந்து வாழத் துவங்கினார்கள். அவர்கள் தங்களுக்குள் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள, தாங்கள் எந்த ஊரிலிருந்து வந்தார்களோ அந்த ஊரின் பெயரினையே தங்களது "குடும்பதின் பட்டப் பெயராக" சூட்டிக்கொண்டார்கள். தமிழகத்தில் உள்ள பல பகுதி மக்களின் ஒட்டுமொத்த "மக்களின் கலவையே" இன்றைய கூத்தாநல்லூர்.

மேலும் பார்க்க[தொகு]


ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூத்தாநல்லூர்&oldid=2103949" இருந்து மீள்விக்கப்பட்டது