உள்ளடக்கத்துக்குச் செல்

முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முத்துப்பேட்டை
—  தேர்வுநிலை பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவாரூர்
வட்டம் முத்துப்பேட்டை வட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன், இ. ஆ. ப [3]
பேரூராட்சி தலைவர் திருமதி மும்தாஜ் நவாஸ் கான் (தி.மு.க.)
மக்களவைத் தொகுதி நாகப்பட்டினம்
மக்களவை உறுப்பினர்

மு.செல்வராசு

மக்கள் தொகை

அடர்த்தி

41,722 (2011)

3,260/km2 (8,443/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 12.80 சதுர கிலோமீட்டர்கள் (4.94 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/muthupettai
முத்துப்பேட்டை சதுப்புநிலம்

முத்துப்பேட்டை (Muthupet), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை வட்டத்தை சேர்ந்த ஒரு நகரம் மற்றும் தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் முத்துப்பேட்டையில் உள்ளது. சதுப்புநிலக் காடுகளுக்காகவும், முத்துப்பேட்டை தர்கா, அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் கோவில், பேட்டை செபாஸ்டியன் தேவாலயம் போன்ற சுற்றுலா தலங்களுக்காக புகழ்பெற்றது. முத்துப்பேட்டை நகரம் திருவாரூர் மாவட்டத்திலேயே மூன்றாவது பெரிய நகரமாக திகழ்கிறது. பட்டுக்கோட்டை மற்றும் திருத்துறைப்பூண்டி நகரங்களுக்கு இடையே உள்ளது. முத்துப்பேட்டை நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7,102 வீடுகளும் மற்றும் 41,722 மக்கள் தொகையும் கொண்டது.

நகராட்சியாக அறிவிக்க அனைத்து தகுதியும் அந்தஸ்தும் கொண்ட அடர்த்தியான நகரம் முத்துப்பேட்டை.

அமைவிடம்

[தொகு]

முத்துப்பேட்டை பேரூராட்சி, திருவாரூரிலிருந்து 55 கி. மீ. தொலைவில் உள்ளது. முத்துப்பேட்டையில் தொடருந்து நிலையம் உள்ளது. இதனைச்சுற்றி அமைந்த நகரங்கள் திருத்துறைப்பூண்டி 23 கி.மீ. நாகப்பட்டினம் 53 கி.மீ.; பட்டுக்கோட்டை 21 கி. மீ. மன்னார்குடி 36 கி. மீ. தொலைவில் உள்ளது.

தேர்வு நிலை பேரூராட்சியாக

[தொகு]

12.80 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 108 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருத்துறைப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

இங்குள்ள தெருக்கள்:

1 முகைதீன் பள்ளித் தெரு

2 செக்கடித் தெரு

3 புதுத்தெரு

4 கும்மிவாடி சந்து

5 புதுமனைத் தெரு

6 கண்ணாரத் தெரு

7 ஆஸ்பத்திரி தெரு

8 கிட்டங்கித் தெரு

9 கொய்யாத்தோப்பு

10 பட்டறைக்குளம் சந்து

11 சீதாவாடி சந்து

12 அரபித் தெரு

13 மீன் மார்க்கெட் தெரு

14 மரைக்காயர் வாடி தெரு

15 நெய்யக்காரத் தெரு

16 குட்டியார்பள்ளி சந்து

17 லெப்பை சந்து

18 கல்கேணி தெரு

19 S.P.K.M. தெரு

20 ஓடக்கரை

21 குண்டாண் குளத்தெரு

22 நடுத்தெரு ²

23 தெற்குத் தெரு

22 A.S.N. தெரு

23 திமிலத் தெரு

24 கால்நடை மருத்துவமனைத் தெரு

25 கோவிலான் தோப்பு

26 மாதா கோவில் தெரு

27 பேட்டை முகைதீன் பள்ளி தெரு

28 பேட்டை சிவன் கோவில் தெரு

29 பேட்டை அக்ரஹாரத் தெரு

30 அங்காளம்மன் கோவில் தெரு

31 ஆசாத் நகர்

32 ரஹ்மத் நகர்

33 ரயிலடித் தெரு

34 பிள்ளையார் கோவில் தெரு

35 ஆத்தங்கரைத் தெரு

36 மதினாபள்ளி தெரு

37 மக்கா பள்ளி தெரு

38 நூர் பள்ளி தெரு

39 கிட்டங்கித் தெரு

40 துவான் தோட்ட வளாகம்

41 P.R.M. கொல்லை

42 கொய்யாத்தோப்பு வடக்குத் தெரு

43 நடுத்தெரு ³

44 சீனாபானா தோப்பு

45 ஆலங்காடு

46 மங்களூரு

47 செம்படவன் காடு

48 தம்பிக்கோட்டை கீழக்காடு

49 தம்பிக்கோட்டை மாரியம்மன் கோவில் தெரு

50 சிறிய கடைத்தெரு

51 பெரிய கடைத்தெரு

52 மன்னார்குடி சாலை

53 போஸ்ட் ஆபிஸ் தெரு

54 சித்தேரி குளத்தெரு

55 புதுக்குளம் தெரு

56 O.P.M சந்து

57 சித்தி விநாயகர் கோவில் தெரு

58 அரசர் குளத்தெரு

59 ஆட்டப்பா சந்து

60 ஜமாலியா தெரு

61 தம்மானியா தெரு

62 ரஹ்மத் பள்ளிவாசல் தெரு

63 முத்துப்பேட்டை தர்காத் தெரு

64 தீன்முகமது காலனித் தெரு

65 கோவிலூர் பெரியநாயகி தெரு

66 கோசாகுளத் தெரு

67 வாணக்காரத் தெரு

68 மாரியம்மன் கோவில் தெரு

69 பாரதியார் தெரு

70 நண்டு மரைக்காயர் தெரு

71 M.M.D காசிம் கொல்லை

72 ஹாஜா சந்து

73 S.K.M தெரு

74 அபூஹனிபா தெரு

75 அக்காஷ் தோப்பு

76 அச்சக்காரன் வாடி சந்து

77 அலியார் சந்து

78 ஷரிப் தெரு

79 காசிம் தென்னமரக்கடை சந்து

80 தெற்கு அப்துல்கரீம் சந்து

81 திருத்துறைப்பூண்டி சாலை

82 பட்டுக்கோட்டை ரோடு

83 தென்னை மரக்கடை சந்து

84 சின்னகட்சி மரக்காயர் தெரு

85 அப்துல் கரீம் சந்து

86 நெய்னார்பள்ளி சந்து

87 பரகத் நகர்

88 கருமாரியம்மன் கோவில் தெரு

89 கொய்யா பஜார்

90 இமாம் அபூஹனிபா தெரு

91 பேட்டை ரோடு

92 மன்சூர் நகர்

93 தெற்கு ரெயில்வே ரொடு

94 புதுக்குடியிருப்பு

95 கோவிலூர் மணல் மேட்டுத் தெரு

96 கல்லடி கொல்லை

97 பேங்க் தெரு

98 புதுக்குடி

99 பூங்கொல்லை

100 வண்ணான் சந்து

101 கீழநம்மங்குறிச்சி

102 தெற்குக் காடு

103 மருதங்காவெளி

104 மாரியம்மன் கோவில் தெரு

105 அய்யா நகர்

106 புதுகாளியம்மன் கோவில் தெரு

107 அக்கரஹாரத் தெரு

108 முத்துசாமி அம்பலம் தெரு

மக்கள்தொகை

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7102 வீடுகளும், 41722 மக்கள்தொகையும் கொண்டது.[5][6][7]

அலுவலகங்கள்

[தொகு]

இங்கு மொத்தம் 18 அரசு அலுவலகங்கள், 1 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 16 கல்விக்கூடங்கள், 12 மருத்துவமனைகள், 166 தெருக்கள், 21 பள்ளிவாசல்கள், 8 கோவில்கள், 2 தேவாலயம் ஆகியவை அமைந்துள்ளன.

அரசு அலுவலகங்கள்:

  1. முத்துப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் (TAHSILDAR OFFICE)
  2. முத்துப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) அலுவலகம்
  3. முத்துப்பேட்டை தேர்வுநிலை பேரூராட்சி மன்ற அலுவலகம் (MUTHUPET TOWN PUNCHAYAT OFFICE)
  4. முத்துப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகம் (SUB REGISTER OFFICE)
  5. முத்துப்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE MUTHUPETTAI)
  6. முத்துப்பேட்டை காவல் நிலையம் (MUTHUPETTAI POLICE STATION)
  7. முத்துப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் (AWPS)
  8. முத்துப்பேட்டை கடலோர காவல்துறை அலுவலகம் (COASTAL GUARD)
  9. வனச்சரக அலுவலகம் (FOREST DEPARTMENT)
  10. முத்துப்பேட்டை தீயணைப்பு துறை அலுவலகம் (MUTHUPET FIRE RESCUE STATION)
  11. முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் (PANCHAYAT UNION OFFICE)
  12. முத்துப்பேட்டை கிராம நிர்வாக அலுவலகம் (VILLAGE ADMINISTRATIVE OFFICE - Muthupettai)
  13. துரைக்காடு கிராம நிர்வாக அலுவலகம் (VILLAGE ADMINISTRATIVE OFFICE - Thuraikkadu)
  14. தபால் அலுவலகம் (POST SUB OFFICE)
  15. சுங்கத் தடுப்பு பிரிவு அலுவலகம் (CUSTOMS PREVENTIVE UNIT)
  16. மின்சார வாரிய அலுவலகம் (TNEB)
  17. வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் (BLOCK EDUCATION OFFICE)
  18. முத்துப்பேட்டை அரசு பொது நூலகம் (PUBLIC LIBRARY)
  19. தொலைத் தொடர்பு அலுவலகம் (BSNL)

தொழில்

[தொகு]

முத்துப்பேட்டையின் பிரதானமாக தொழிலாக இருப்பது மீன் பிடிப்பதும், வீட்டுமனை விற்பனை, விவசாயம், தேங்காய் வியாபாரமுமாகும். முத்துப்பேட்டையிலிருந்து பல மாநிலங்களுக்குத் தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சுற்றுலா மையம்

[தொகு]

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி காடுகள் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய சதுப்பு நிலக்காடுகளாகும். இது திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இடையில் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 119 கிலோ மீட்டர். முத்துப்பேட்டை மாங்குரோவ் காடுகள் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளைவிட 10 மடங்கு பெரியது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாங்குரோவ் காடுகள் இவை.

முத்துப்பேட்டையில் சதுப்பு நிலக்காடுகள் (லகூன்) அமைந்துள்ளது தனித்தனித்தீவுகளாக காட்சியளிப்பது முத்துப்பேட்டையின் சிறப்பம்சமாகும். உலகின் பல்வேறு பகுதியிலிருந்து பலவகைப் பறவை இனங்கள் குறிப்பிட்ட சில காலங்களில் இங்கு வந்து தங்கி தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறது.

முத்துப்பேட்டை தர்கா

[தொகு]

சுமார் 700 வருடங்கள் பழமை வாய்ந்த முத்துப்பேட்டை தர்காவிற்கு அனைத்து சமுதாய மக்களும் வருகை தருகின்றனர். பழம்பெருமை வாய்ந்த இந்த இடம், இஸ்லாமிய கட்டுமான முறைகளின்படி கட்டப்பட்டதாகும். இஸ்லாமிய மார்க்கத்தில் கூறப்பட்டுள்ள சமூக சம உரிமை, பாகுபாடின்மை ஆகியவற்றை வலியுறுத்திய ஹழரத் ஷைக் தாவூத் காமில் ஒலியுல்லாஹ் எனும் பெருந்தகையின் நினைவிடமாகும்.

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

[தொகு]

70 கி.மீ. தொலைவில் தஞ்சாவூரும், 29 கி.மீ. தொலைவில் மல்லிபட்டினமும் வேளாங்கண்ணி நாகூர் தென் கிழக்கு முனையில் கோடியக்கரையும் சுற்றுலாத் தலங்களாக அமைந்துள்ளன.

நகர வளர்ச்சி

[தொகு]

"ஆவன்னா நேனா உதவி பெறும் துவக்கப் பள்ளி"தான் முத்துப்பேட்டையில் துவங்கப்பட்ட முதல் பள்ளிக்கூடமாகும். இப்பள்ளி சங்கத்து பள்ளிக்கூடம் என்றும் அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. முத்துப்பேட்டை பேரூராட்சியின் இணையதளம்
  5. http://www.townpanchayat.in/muthupettai/population
  6. Muthupet Population Census 2011
  7. Muthupet Town Panchayat

வெளி இணைப்புகள்

[தொகு]