நன்னிலம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நன்னிலம் வட்டம் , தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக நன்னிலம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 73 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]நன்னிலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நன்னிலம் மதுவனேசுவரர் கோயில் இவ்வட்டத்தில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 137,964 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 69,360 ஆண்களும், 68,604 பெண்களும் உள்ளனர். 35,102 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 86.4% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 84.48% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 989 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 13655 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 949 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 48,462 மற்றும் 98 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 93.46%, இசுலாமியர்கள் 5.16%, கிறித்தவர்கள் 1.25% மற்றும் பிறர் 0.05%ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நன்னிலம்_வட்டம்&oldid=2725771" இருந்து மீள்விக்கப்பட்டது