ம. இராசேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ம. இராசேந்திரன்
ம. இராசேந்திரன்.jpg
ம. இராசேந்திரன்
தேசியம்இந்தியர்
பணிஎழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை
மைதிலி
பிள்ளைகள்இரண்டு

ம. இராசேந்திரன் (M. Rajendran) தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பு வகித்தவர். இவர் தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர் மற்றும் கணையாழி இதழின் வெளியீட்டாளரும் ஆவார். இவர் கோயம்புத்தூரில் 2010 ஆம் ஆண்டில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க ஒருங்கிணைப்பாளர்.

பிறப்பு[தொகு]

ம. இராசேந்திரனுக்கு திருவாரூர் மாவட்டம் குடவாயில் சொந்த ஊர் ஆகும். தவிலிசைக் கலைஞர் மகாதேவனுக்கும் ஞானம்பாளுக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த அன்னவாசல் என்னும் சிற்றூரில் இராசேந்திரன் தலைமகனாகப் பிறந்தார்.[1]

கல்வி[தொகு]

ம. இராசேந்திரன் பிறந்த ஓராண்டிற்குள்ளேயே அவர் தந்தை காலமாகிவிட்டார். அதனால் அவர் தன் தாய்மாமன் ஆதரவில் பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றார். அங்கு கோபாலய்யர் கல்லூரி முதல்வராகவும் இவருக்கு ஆசிரியராகவும் இருந்தார்.[1] பின்னர் எம்.ஏ தமிழ் மற்றும் எம்.பில் ஆகியவற்றை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தார். தத்துவவியலில் 1984ஆம் ஆண்டு முனைவர் பட்டத்தை பெற்றுள்ளார். மெக்கன்சியின் சுவடிகளில் (1754-1821) ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார்.[2]

பணி[தொகு]

இராசேந்திரன் தமிழ்நாடு அரசில் பின்வரும் பொறுப்புகளை வகித்தார்[3]:

 • குறள் பீடம் பொறுப்பாளர்
 • மொழிபெயர்ப்புத் துறையின் துணை இயக்குநர்
 • அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் ஆய்வு நூலகப் பணி - பன்னிராண்டுகள்
 • தமிழ்ப் பல்கலைக் கழகச் சிறப்புத்தகைமை விரிவுரையாளர் - மூன்றாண்டுகள்
 • உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வுப்பணி தனிஅலுவலர் – இரண்டாண்டுகள்
 • மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் – மூன்றாண்டுகள் ஆண்டுகள்
 • அகரமுதலித் திட்டப் பொறுப்பு இயக்குநர்
 • தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் – (1.4.1999 முதல் 17.6.2008 வரை)[4]
 • உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் – சூன் 2006 முதல் சூன் 2008 வரை
 • திராவிட மொழியியல் பள்ளி, திருவனந்தபுரம், இயக்குநர்
 • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் - 19.6.2008 ஆம் நாள் முதல் 18.6.2011 ஆம் நாள் வரை.[5][6]

படைப்புகள்[தொகு]

 1. 1990 அந்திப்பொழுதில் - சிறுகதைகள் -
 2. 1992 விடிகிற வேளையில் - சிறுகதைகள் -
 3. 1994 குற்றவாளிகள் - சிறுகதைகள் -
 4. 1996 வளர்ப்பு - சிறுகதைகள் -
 5. 2003 நின்றசொல் - கட்டுரைகள் - கணையாழி படைப்பகம், சென்னை.
 6. 2004 சிற்பியின் வீதி - சிறுகதைகள் - கணையாழி படைப்பகம், சென்னை.
 7. காலின் மெக்கன்சி வரலாறும் சுவடிகளும் - ஆய்வு
 8. மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள் - ஆய்வு
 9. ஓமநதி, சிறுகதைத் தொகுதி, கவிதா பதிப்பகம்,சென்னை
 10. நினைக்கப்படும், கவிதா பதிப்பகம்,சென்னை
 11. கணையாழி தலையங்கம், கவிதா பதிப்பகம்,சென்னை
 12. பழவேற்காடு வரலாறு, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
 13. பூம்புகார், ஆவணக் குறும்படம் சென்னைத் தொலைக்காட்சிக்காக
 14. திரையில் தமிழ் ஆவணக் குறும் படம், சென்னைத் தொலைக்காட்சிக்காக

பதிப்பித்தவை[தொகு]

 1. திருக்குறள் மதுர கீர்த்தனை, தமிழ் நாடு அரசு
 2. தமிழ்மொழி வரலாறு, தமிழ் நாடு அரசு
 3. குறளமுதம், தமிழ்நாடு அரசு
 4. திருக்குறள் நூல்கள்,தமிழ்நாடு அரசு
 5. ஆத்திசூடி, பரிமேலழகர் உரை, சென்னைப் பல்கலைக்கழகம்
 6. காதல் கொத்து, தொல்பொருள் ஆய்வுத்துறை
 7. ஆட்சிச்சொல் அகராதி, தமிழ் நாடு அரசு
 8. அரசினர் கிழக்கியல் சுவடிகள் அட்டவணைகள், தமிழ்நாடு அரசு
 9. 2005 எம். எஸ். பூரணலிங்கம்பிள்ளை - உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
 10. 2007 பேராசிரியர் அ. மு. பரமசிவானந்தம் - 40 கட்டுரைகள் - உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
 11. சோழர் கால ஓவியங்கள், தமிழ்ப் பல்கலைக்கழகம்
 12. Editor, journal of Tamil studies 2006-2008

குடும்பம்[தொகு]

ம. இராசேந்திரனுடன் உடன்பிறந்தவர்கள் இரு பெண்கள். இவர் மைதிலி என்பவரை மணந்துள்ளார். இவர்களுக்கு தென்றல், எழில் என்னும் இரு பெண்மக்கள் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

 1. சாதி, மதம், வட்டாரத்தைக் கடந்து தமிழை பொது மொழியாக்க வேண்டும் - ம. இராசேந்திரன் 25 - ஏப்ரல் 2010 கீற்று மின்னிதழில் வெளிவந்த நேர்காணல்
 2. சிந்துவெளிக்கு ஒளி தந்தவர் - முனைவர் ம. இராசேந்திரன் - தினமணி; 2018 நவம்பர் 27
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._இராசேந்திரன்&oldid=3276055" இருந்து மீள்விக்கப்பட்டது