வலங்கைமான் மாரியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வலங்கைமான் மாரியம்மன் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவாரூர் மாவட்டம்
அமைவு:வலங்கைமான்
கோயில் தகவல்கள்
மூலவர்:மாரியம்மன்

வலங்கைமான் மாரியம்மன் கோயில், தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் அமைந்துள்ளது.

அமைப்பு[தொகு]

கோயில்

இக்கோயில் முன் மண்டபம், கருவறை, விமானம், உள் சுற்று, வெளிச்சுற்று ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது. உள் திருச்சுற்றில் இருளன், பேச்சியம்மன், மதுரைவீரன் சன்னதிகள் உள்ளன. கருவறைக்கு முன்புறம் வலப்புறத்தில் விநாயகர் சன்னதி உள்ளது.

மூலவர்[தொகு]

இக்கோயிலின் மூலவராக மாரியம்மன் உள்ளார். அவர் சீதளாதேவி அம்மன் என்றும் பாடை கட்டி மாரியம்மன் என்றும் அழைக்கப்படுகிறார்.

சிறப்பு[தொகு]

ஆவணி, பங்குனி ஆகிய இரு மாதங்களிலும் மாரியம்மனுக்கு திருவிழா நடைபெறுகின்றது. ஏழு நாட்கள் விழா நடைபெறும். எட்டாம் நாள் புகழ் பெற்ற பெற்ற பாடைத் திருவிழாவும், ஒன்பதாம் நாள் புஷ்பப் பல்லக்கும் சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. வலங்கைமான் அருள்மிகு மகாமாரியம்மன் தல வரலாறு, மகாமகம் சிறப்பு மலர் 2004, பக்.216,217

வெளி இணைப்புகள்[தொகு]