சிதம்பரம் (நகரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிதம்பரம்
—  தேர்வு நிலை நகராட்சி  —
சிதம்பரம்
இருப்பிடம்: சிதம்பரம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°24′25″N 79°41′28″E / 11.407000°N 79.691200°E / 11.407000; 79.691200ஆள்கூறுகள்: 11°24′25″N 79°41′28″E / 11.407000°N 79.691200°E / 11.407000; 79.691200
நாடு  இந்தியா
பகுதி சோழ நாடு
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
வட்டம் சிதம்பரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்ரமணியம், இ. ஆ. ப [3]
நகராட்சி தலைவர்
மக்களவைத் தொகுதி சிதம்பரம் (தனி)
மக்களவை உறுப்பினர்

தொல். திருமாவளவன்

சட்டமன்றத் தொகுதி சிதம்பரம்
சட்டமன்ற உறுப்பினர்

கே. ஏ. பாண்டியன் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

62,153 (2011)

12,949/km2 (33,538/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

4.8 சதுர கிலோமீட்டர்கள் (1.9 sq mi)

31 மீட்டர்கள் (102 ft)


சிதம்பரம் (Chidambaram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை நகராட்சி ஆகும். இவ்வட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராசர் கோயில் உலகப்புகழ் பெற்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 33 [நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 15,166 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 62,153 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 91.9% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,032 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5869 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,232 மற்றும் 56 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 89.73%%, இசுலாமியர்கள் 8.22%, கிறித்தவர்கள் 1.18%, தமிழ்ச் சமணர்கள் 0.43%, மற்றும் பிறர் 0.44% ஆகவுள்ளனர்.[4]

வரலாறு[தொகு]

தமிழ் நாட்டில் புகழ் பெற்ற நகரங்களுள் ஒன்று ஆகும். சிதம்பரம், ஆலயநகர் என்றும் நாட்டிய நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் நாட்டியத்திற்கும், கட்டடக்கலைக்கும், பக்திக்கும் புகழ் பெற்ற நகரம் சிதம்பரம் ஆகும்.

சிதம்பரத்துக்குப் பெரும்பற்றப்புலியூர் என்று பெயர். புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதர் பூசை பண்ணியதால் அதற்குப் புலியூர் என்று பெயர். அந்தக் கோயிலுக்குச் சிதம்பரம் என்று பெயர். “சித் - ஞானம்”, “அம்பரம் - ஆகாசம்”. சித் + அம்பரம் - சிதம்பரம். காலப்போக்கில் அந்த ஊர் பேர் மறைந்து கோயில் பெயரே ஊரின் பெயராக மாறிவிட்டது.[5]

திருசிற்றம்பலம் என்ற பெயர், சிற்றம்பலமாக மருவி சிதம்பரம் என வழங்கப்படுகிறது. சிதம்பரத்தில் உள்ள ஆலயம் உலகப்புகழ் பெற்றது. இது தில்லை மரங்கள் நிறைந்த காடாக முற்காலத்தில் இருந்ததால், தில்லை என்றும் தில்லையம்பலம் என்றும் அழைக்கப்பட்டது.

ஆலயங்கள்[தொகு]

சிதம்பரத்தில் உள்ள ஆலயம் மிகவும் பழைமையானது, பெருமை வாய்ந்தது. சைவர்களின் முக்கியக் கடவுளான சிவபெருமானின் நடராசர் ஆலயமும், வைணவர்களின் முக்கியக் கடவுளான திருமால், கோவிந்தராசப் பெருமாள், புண்டரீகவல்லித் தாயாருடன் வீற்றிருக்கும் சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராசன் ஆலயமும் இந்த நகருக்கு பெருமை சேர்க்கிறது. மேலும் இங்கு தில்லையம்மன் ஆலயமும், இளமையாக்கினார் ஆலயமும், திருச்சித்திரக்கூடமும் இருப்பதால் இந்நகரம் ஆலய நகரம் என்று அழைக்கப்படுகின்றது.

மேலும் பார்க்க[தொகு]

ஆதாரம்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. சிதம்பரம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
  5. கிருபானந்த வாரியார் எழுதிய “செஞ்சொல் உரைக்கோவை” நூல் பக்:127
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிதம்பரம்_(நகரம்)&oldid=3597657" இருந்து மீள்விக்கப்பட்டது