சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் திருக்கோயில்[1]
பெயர்
புராண பெயர்(கள்):திருச்சித்ரகூடம்
பெயர்:சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் திருக்கோயில்[1]
அமைவிடம்
ஊர்:சிதம்பரம் (சிதம்பரம் நடராசர் கோயில் உள்ளே)
மாவட்டம்:கடலூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கோவிந்தராஜர்
உற்சவர்:தேவாதிதேவன்
தாயார்:புண்டரீகவல்லி
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
விமானம்:சாத்வீக விமானம்
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்
தொலைபேசி எண்:+91- 4144 - 222 552, 98940 69422.

சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் சிதம்பரம் நடராசர் கோயிலின் உள்ளே அமைந்துள்ளது.

தல வரலாறு[தொகு]

ஒருமுறை கயிலாயத்தில் சிவனும் பார்வதியும் நடனம் புரிந்தனர். அதில் யார் சிறந்தவர் என பார்வதி ஒரு போட்டி வைத்து தெரிந்து கொள்ளலாம் என அனைத்து தேவர்களையும் அழைத்தாள். அனைவரும் சிவன் வென்றார் என்றனர். உடனே பார்வதி திருமாலை வேண்டினாள். மனம் இறங்கி திருமால் இப்போட்டியில் கலந்து கொண்டார். சிவன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். பார்வதி பெண் என்பதால் அவளால் ஆடமுடியாமல் வெட்கி நின்றாள். அதனால் திருமால் சிவனே இப்போட்டியில் வென்றார் என்றார். இதைக்கேட்ட கோபத்தில் பார்வதி காளியாகி ஓட அவளை தடுக்க சிவன் ஊர் எல்லையில் படுக்க, காளி சிவனின் மார்பில் மிதித்து கோபம் தணித்தாள். கோபம் தணிந்த பார்வதியும், சிவனும் திருமாலை சிவனின் சந்நிதிக்கு எதிரில் குடிகொள்ளுமாறு வேண்டிக்கொண்டனர்.

சன்னதிகள்[தொகு]

இக்கோவிலில் சீதை, இராமர், இலக்குமணன், ஆஞ்சநேயர், புண்டரீகவல்லி தாயார் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன.

வழிபட்டோர்[தொகு]

சிவன், பார்வதி, நந்தி, வாசுகி, கைலாயத்தில் உள்ளவர்கள்

பிரம்மா[தொகு]

திருமாலின் நாபிக்கமலத்தில் பிரம்மா அமர்ந்தபடி இல்லாமல் நின்றபடி உள்ள அமைப்பு வித்தியாசமானது.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

[[1]]