இலால்பேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலால்பேட்டை
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் V.P. தண்டபாணி இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை 13,797 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

இலால்பேட்டை (Lalpet) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[4][5]

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,797 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். இலால்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இலால்பேட்டை மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

வரலாறு[தொகு]

ஆற்காடு நவாபுகளின் ஆட்சித்தொடரில் சிறந்த ஆட்சி அமைத்து பற்பல சிறந்த சேவைகளை செய்த அன்வருத்தீன் என்பவரின் அமைச்சரவையில் இருந்த "லால்கான்" என்பவரே இந்த லால்பேட்டை என்ற ஊரை வளர்த்தெடுத்தவர். அமைச்சர் லால்கான் இப்பகுதியில் தங்கி சேவையாற்றியுள்ளார். அவர் தங்கியிருந்த பகுதிக்கு "கான் இருப்பு" எனும் சொல் வழங்கிவந்துள்ளது. அது இன்றும் "காங்கிருப்பு" என அழைக்கப்படுகிறது. இன்னும் அப்பகுதி பாசனத்திற்கென அவர் வீராணத்திலிருந்து கொண்டு வந்துள்ள வாய்க்காலுக்கு "கான் வாய்கால்" என அழைக்கப்படுகிறது.

இப்படியாய் தன் நிர்வாகத்தை இங்கே துவங்கிய லால்கான் தன் குற்றேவலர்களை ஒருபகுதியில் தங்கவைத்துள்ளார். இன்று குற்றேவலர்-கொத்தவால் தெரு என அழைக்கப்படுகிறது. அத்துடன் இதை ஒரு பேரூராக மாற்றியமைக்க முனைந்த லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதை முதன் முதலாக் சிறிய அளவில் நிறுவி அதனை சுற்றி வடக்குதெரு,தெற்குதெரு, கீழத்தெரு, மேலத்தெருவிலும் முஸ்லிம்களை கொண்டுவந்து குடியமர்த்தினார். இதனுடன் கொற்றேவலர்-கொத்தவால்தெருவும் இணைந்திருந்தது.

அத்துடன் பாகு பாடற்ற இஸ்லாமிய உணர்வுள்ள லால்கான் அவர்கள் வீராணக்கரை யோரம் இன்று,சத்திரம், சாவடி என அழைக்கப்படுகின்ற ஒரு சத்திரம் கட்டி அதன் அருகே கோவில் ஒன்றும் அமைத்து, மேலும் ஒரு குளமும் தோண்டியுள்ளார், அந்த குளம் திருக்குளம் என்று இன்று வரை கூறப்படுகிறது, அதன் நாற்புறத்து கரையிலும் எட்டு ஜாதி மக்களை லால்கான் குடியமர்த்தினார்.[சான்று தேவை]

இப்படி ஜாமிஆ மஸ்ஜிதின் பகுதியில் முஸ்லிம்களும் வீராணப்பகுதியில் இந்துக்களும் ஒரே சம காலத்தில் குடியமர்த்தப்பட்டனர்.

மத நல்லிணக்கத்தின் உதாரணமாய் விளங்கி வரும் இந்த லால்பேட்டை 1775 ஆம் ஆண்டுக்கு முன்பு லால்கானால் உருவாக்கப்பட்டது[7].

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=18&centcode=0004&tlkname=Kattumannarkoil#MAP
  5. http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=18
  6. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  7. லால்பேட்டை ஓர் அறிமுகம்

ஊரைப்பற்றி

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலால்பேட்டை&oldid=2547124" இருந்து மீள்விக்கப்பட்டது