உள்ளடக்கத்துக்குச் செல்

திட்டக்குடி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திட்டக்குடி வட்டம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக திட்டக்குடி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 109 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]

இவ்வட்டத்தில் திட்டக்குடி வைத்தியநாதசுவாமி திருக்கோயில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 262,606 ஆகும். அதில் 132,409 ஆண்களும், 130,197 பெண்களும் உள்ளனர். 65,216 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 83.9% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 69.72% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 983 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 28401 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 880 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 105,638 மற்றும் 1,039 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 97.7%, இசுலாமியர்கள் 1.7%, கிறித்தவர்கள் 0.44% மற்றும் பிறர் 0.15% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திட்டக்குடி_வட்டம்&oldid=3382479" இலிருந்து மீள்விக்கப்பட்டது