கங்கைகொண்டான் (கடலூர்)

ஆள்கூறுகள்: 11°32′24″N 79°29′12″E / 11.539928°N 79.486685°E / 11.539928; 79.486685
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்கைகொண்டான்
கங்கைகொண்டான்
இருப்பிடம்: கங்கைகொண்டான்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°32′24″N 79°29′12″E / 11.539928°N 79.486685°E / 11.539928; 79.486685
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
வட்டம் விருத்தாச்சலம் வட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

6,434 (2011)

330/km2 (855/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 19.50 சதுர கிலோமீட்டர்கள் (7.53 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/gangaikondan

கங்கைகொண்டான் (ஆங்கிலம்:Gangaikondan), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

கடலூர் - விருத்தாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த கங்கைகொண்டான் பேரூராட்சிக்கு கிழக்கில் கடலூர் 45 கிமீ; மேற்கில் விருத்தாச்சலம் 18 கிமீ; வடக்கில் சிதம்பரம் 40 கிமீ மற்றும் தெற்கில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் 10 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

19.50 சகிமீ பரப்பும் , 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 25 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி புவனகிரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,620 வீடுகளும், 6,434 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 88% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 609 மற்றும் 39 ஆகவுள்ளனர். [5]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. கங்கைகொண்டான் பேரூராட்சியின் இணையதளம்
  5. Gangaikondan Population Census 2011

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கைகொண்டான்_(கடலூர்)&oldid=2982670" இலிருந்து மீள்விக்கப்பட்டது