காட்டுமன்னார்கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காட்டுமன்னார்கோயில்
காட்டுமன்னார்கோயில்
இருப்பிடம்: காட்டுமன்னார்கோயில்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°16′22″N 79°33′20″E / 11.272693110431502°N 79.5555038441671°E / 11.272693110431502; 79.5555038441671ஆள்கூற்று: 11°16′22″N 79°33′20″E / 11.272693110431502°N 79.5555038441671°E / 11.272693110431502; 79.5555038441671
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் V.P. தண்டபாணி இ. ஆ. ப. [3]
சட்டமன்றத் தொகுதி காட்டுமன்னார்கோயில்
சட்டமன்ற உறுப்பினர்

முருகுமாறன் (அதிமுக)

மக்கள் தொகை 22,426 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

காட்டுமன்னார்கோயில் (ஆங்கிலம்:Kattumannarkoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர்மாவட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலை பேரூராட்சி ஆகும்.

வரலாறு[தொகு]

காட்டு மன்னார் கோவில் இது வைணவத் தலமாகும். வைணவப் பெரியார் நாதமுனிகளும் அவர் மூதாதையரான ஸ்ரீஆளவந்தாரும் தோன்றிய ஆலயம். வைணவர்கள் இதனை வீரநாராயணபுரம் எனக்குறிப்பிடுவர். இது காட்டு மன்னார்குடா என்றும் அழைக்கப்படுகின்றது. இது கல்வெட்டுக்களில் வீரநாராயண சதுர்வேதி மங்கலம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. வீராநாராயணன் என்ற விருதுப் பெயர் கொண்ட முதலாம் பராந்தகனால் இவ்வூர் அமைக்கப்பட்டது என்பர். இவ்வூர் சிதம்பரத்தில் இருந்து 26 கி.மீ. தூரத்தில், கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து 13 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,426 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். காட்டுமன்னார்கோயில் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காட்டுமன்னார்கோயில் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

பள்ளிகள்[தொகு]

 1. பருவதராஜ குருகுலம் மேல்நிலைப்பள்ளி
 2. அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
 3. அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
 4. கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
 5. ஜி.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
 6. கலைமகள் (உதவிபெறும்) நடுநிலைப்பள்ளி
 7. கிழக்குப்பள்ளி

வீராணம் ஏரி[தொகு]

காட்டுமன்னார்கோயில் நகரத்திற்கு அருகில் வீராணம் ஏரி உள்ளது. காவிரியின் கொள்ளிடத்தில் உள்ள அணைக்கரை என்னும் கீழ்அணையிலிருந்து வடவாறு (வடவர் கால்வாய்) வழியாக இவ்வேரிக்கு நீர் வருகிறது. இதன் கொள்ளளவு 1445 மில்லியன் கன அடி. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற புதினம் இவ்வேரியின் கரையிலிருந்து தொடங்குகிறது. அப்புதினத்தில் இவ்வேரி 'வீரநாராயண ஏரி' என குறிப்பிடப்பட்டிருக்கும்.

அருகில் உள்ள சிறுநகரங்கள் ஊராட்சிகள்[தொகு]

இலால்பேட்டை ஆயங்குடி


ஆதாரங்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 4. http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban - Cuddalore District;Kattumannarkoil Taluk;Kattumannarkoil (TP) Town 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை


"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டுமன்னார்கோயில்&oldid=2686682" இருந்து மீள்விக்கப்பட்டது