சத்ய ஞான சபை
Sabai (சபை) | |
---|---|
சத்திய ஞான சபை Sathya Gnana Sabai | |
குறிக்கோளுரை: எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க | |
பண்: அருட்பெரும்ஜோதி; அருட்பெரும்ஜோதி: தனிப்பெரும்கருணை; அருட்பெரும்ஜோதி | |
நாடு | இந்தியா |
தோற்றுவித்தவர் | இராமலிங்க சுவாமிகள் (வள்ளலார்) |
சத்ய ஞான சபை தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் வடலூர் அருகே அமைந்துள்ள சமரச சன்மார்க்கச் சங்கம், திருவருட்பா அருளிய வள்ளலார் இந்த சமரச சன்மார்க்கச் சங்கத்தை 25 சனவரி 1872-ல் தோற்றுவித்தார்.[1][2]
ஞானசபை பெயர் மாற்றம்
[தொகு]1872 இல் நிறுவப்பட்ட சபைக்கும் சங்கத்தின் பெயரை ஒட்டியே பெயர்கள் மாற்றி அமைத்து இருந்தன.1872 சூலை மாதம் 18ம் நாள் ஞான சபை வழிபாட்டுக்குரிய விதிகளை வகுத்தருளிய போது சங்கம் சாலை சபை ஆகிய மூன்றன் பெயரையும் மாற்றி அமைத்தார்கள் சமரச வேத சன்மார்க்க சங்கம் என்ற பெயர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என பெயர் மாற்றப்பட்டது இப்பெயர் மாற்றத்தில் வேத என்னும் சொல் நீக்கப்பட்டும் சுத்த சக்திய என்னும் சொற்கள் உற்ற இடத்தில் பெய்து விளக்கப்பட்டும் இருப்பது கவனிக்கப்பாலது. ஞான சபை வழிபாட்டுக்கான விதிகளை அடிகள் எழுதி அருளிய ஞான சபை விளக்க விபவ பத்திரிக்கை என்னும் கட்டளையின் முதல் பகுதியில் இம்மாற்றங்கள் அறிவிக்கப்படுகின்றன.
1872 சனவரி 25 பூச நாள் அன்று சபையின் பெயரை வள்ளலார் மாற்றி அமைத்து வழிபாடு தொடங்கப் பெற்றது. அதன்படி சத்திய ஞானசபை சமரசசுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை என பெயர் மாற்றம் அடைந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Guide, Pg 53
- ↑ Tamil Nadu Guide, Pg 66