உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்ச் சமணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமிழ்ச் சைனர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழ் சமணர்கள்
மொத்த மக்கள்தொகை
83,359
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
சைனம்

தமிழ்ச் சமணர்கள் (Tamil Jain) எனப்படுவோர் சைன சமயத்தைச் பின்பற்றும் தமிழர்கள் ஆவர். தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 83,359 மக்கள் சைன சமயத்தைப் பின்பற்றுகின்றனர். அறம், துறவு, கொல்லாமை, அகிம்சை ஆகிய விழுமியங்களை தமிழ்ச் சமூகத்திடம் வேரூன்ற செய்வதில் முக்கிய பங்கு வகித்தனர். தமிழ் மொழிக்கும் இவர்களின் பங்கு முக்கியமானது.[1]

வரலாறு

[தொகு]

சீவக சிந்தாமணி, வளையாபதி ஆகிய மூன்று இலக்கியங்களும் சைனர்களால் எழுதப்பட்டவை. சிலப்பதிகாரம் காலத்தில் தமிழகத்தில் ஆசீவகம், சைனம், பௌத்தம், சைவம் ஆகிய மூன்று மதங்களும் செழிப்புடன் இருந்தன என்று சிலப்பதிகாரம் சுட்டிக்காட்டுகிறது.[2] திருவள்ளுவர் சைனர் என்று தமிழ் அறிஞர்கள் திரு.வி.க., வையாபுரி பிள்ளை, உ.வே.சா. ஆகியோர் அழுத்தமாகக் கூறுகின்றனர். மதுரையில் கி.பி.604 ஆம் ஆண்டில் சங்கா என்று அழைக்கப்பட்ட சைன கூடுகை நிரந்தரமாக இருந்து வந்தது. இதுதான் மதுரையில் நிறுவப்பட்ட தமிழ்ச்சங்கத்துக்கு அடித்தளமாக இருந்திருக்க வேண்டுமென்று ஜார்ஜ் எல். ஹார்ட் கூறுகிறார்.[சான்று தேவை]

சைனமதத்துக்கும், சைவமதத்துக்கும் நிலவிய போட்டியில் சைவம் தமிழ் மூவேந்தர்களை தன் வசம் இழுத்துக்கொண்டது. இருப்பினும், சாளுக்கியர்கள், பல்லவர்கள் சைனமதத்தை அணைத்துக் கொண்டனர். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் சைனம் தமிழகத்தில் பெருமை இழக்கத் தொடங்கியது.[3]

எண்ணிக்கை

[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,88,58683 சமணர்களில்[4] தமிழ்ச் சமணர்கள் 83,359 இருப்பதாக ஊகிக்கப்படுகிறது. இது தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையான 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேரில் வெறும் 0.12 விழுக்காடு ஆகும். இவர்களில் 68,587 பேர் கல்வியறிவு படைத்தவர்கள். இவர்களில் சிறுபகுதியினர் விவசாயிகள் ஆவர். பெரும்பாலானவர்கள் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் கணிசமானவர்கள் நகரங்களில் குடியேறி பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி வருகிறார்கள்.[3]

வட இந்திய சைனர்களுடன் ஒப்பீடு

[தொகு]

தமிழ் சைனர்கள் தமிழகமெங்கும் சிதறிக் கிடக்கிறார்கள் என்பதுடன் அவர்கள் விவசாயத்தை தொழிலாக கொண்டவர்கள். வணிகத்தில் ஈடுபடுவதில்லை. அவர்களுடைய நிலங்களும் தரிசாக கிடப்பதால் அவர்கள் நகரங்களுக்கு குடியேறி வருகிறார்கள். வட இந்திய சைனர்கள் வேளாண்மைத் தொழில் மட்டும் செய்வதில்லை. ஆனால் வணிகம் மற்றும் பெருந்தொழில்களில் ஈடுபட்டு செல்வச்செழிப்புடன் வாழ்வதால் தமிழகமெங்கும் அறியப்பட்டுள்ளார்கள். இவர்களின் எண்ணிக்கை தமிழ்ச் சைனர்களை விட அதிகமாக உள்ளது. அவர்கள் பள்ளிகள், கல்லூரிகள் நடத்துவதுடன் அறக்காரியங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் சென்னையில் மட்டும் 100 சைனக்கோவில்களை கட்டியுள்ளார்கள். இவர்கள் கட்டிய கோவில்கள் பளிங்குக்கற்களால் கட்டப்பட்டவை. தமிழ்ச் சைனர்களின் கோவில்கள் திராவிட பாணியில் கட்டப்பட்ட கோவில்கள்.[3]

தமிழ்ச் சமணக் காப்பியங்கள்

[தொகு]

இதையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. மயிலை, சீனி. வேங்கடசாமி. சமணமும் தமிழும். சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.
  2. "பெருங்காப்பியங்கள்". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 12 சனவரி 2014.
  3. 3.0 3.1 3.2 "தமிழ் சமணர்கள் பிற மாநிலத்தவர் அல்ல". தீக்கதிர்: pp. 8. 07 சனவரி 2014 இம் மூலத்தில் இருந்து 2016-03-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160317005050/http://theekkathir.in/2014/01/07/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2/. பார்த்த நாள்: 12 சனவரி 2014. 
  4. Tamil Nadu Population Census data 2011

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்ச்_சமணம்&oldid=3215347" இலிருந்து மீள்விக்கப்பட்டது