தமிழ்நாட்டில் சமணம்
தமிழ்நாட்டில் சமணம் (Jainism in Tamil Nadu), தமிழ்நாட்டில் சமணத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் தற்போதைய நிலையைக் விளக்குகிறது.
வரலாறு[தொகு]
தமிழ்நாட்டில் கிமு மூன்றாம் நூற்றாண்டின் துவக்ககால தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் மற்றும் கிபி எட்டாம் நூற்றாண்டின் திருச்சி மலைக் கோட்டை கல்வெட்டுக்கள் தமிழ்நாட்டில் சமணர்களின் இருப்பை வெளிக்கொணர்கிறது. [1]
தற்கால மக்கள்தொகை பரம்பரல்[தொகு]
சமணத்தின் திகம்பரப் பிரிவைச் சேர்ந்த தமிழ்ச் சமணர்கள், தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், குறிப்பாக வட தமிழகத்தின் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர் மாவட்டங்களில் பெருவாரியாக வாழ்கின்றனர். தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகையில், தமிழ்ச் சமணர்களின் எண்ணிக்கை 85,000 (0.13%) ஆகவுள்ளது.
அரசர்களின் ஆதரவு[தொகு]
களப்பிரர்கள் தமிழ்நாட்டை கிபி 3 முதல் 7-ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட போது, சமணத்தை ஆதரித்தனர். [2]
பல்லவர்கள் இந்து சமயத்துடன், சமணத்தையும் ஆதரித்தனர். பல்லவ மன்னர்கள் திரைலோக்கியநாதர் கோயில், சிதறால் மலைக் கோவில்களைக் கட்டி சமணத்தை ஆதரித்தனர்.[3][4]
துவக்கத்தில் சமணத்தை ஆதரித்த பாண்டியர்கள், பின்னர் திருஞானசம்பந்தரால் சைவ சமயத்தை போற்றினர்.[5]
பாண்டியர்கள் சமண பண்பாட்டுத் தலங்களான சித்தன்னவாசல் குகை ஓவியங்கள், சமணர் மலை, மதுரை, கழுகுமலை சமணர் படுகைகள் போன்றவற்றவை நிறுவினர்.
சோழர்கள் சைவ சமயத்துடன், சமணத்தையும் ஆதரித்தனர்.[6] சோழ மன்னர் முதலாம் இராஜராஜ சோழனின் சகோதரி குந்தவை நாச்சியார் திருமலை சமணர் கோயில் வளாகம், திறக்கோயில், பூண்டி அருகர் கோயில், மன்னர்குடி மல்லிநாதர் கோயில்களைக் கட்டினார்கள்
கலை[தொகு]
தமிழ் இலக்கியத்தின் மீது சமணத்தின் தாக்கங்கள்[தொகு]
சங்கத் தமிழ் இலக்கியத்திற்கு சமணர்களின் பங்கு அளப்பரியது. சமண முனிவர்கள் இயற்றிய சீவக சிந்தாமணி, நாலடியார் மற்றும் ஐஞ்சிறு காப்பியங்களான உதயணகுமார காவியம், சூளாமணி, நாக குமார காவியம், நீலகேசி, யசோதர காவியம் ஆகியவை குறிப்பிடத்தக்கது. [7] சங்க இலக்கியத்தின் சமணர்களின் இலக்கியங்கள் எட்டாம் நூற்றாண்டில் அல்லது அதற்குப் பின்னர் எழுதப்பட்டது என சில அறிஞர்கள் கருதுகிறார்கள்.[8]தமிழின் இரட்டை காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் சமணத்தின் தாக்கங்கள் அதிகம் உள்ளது.[9]
அகராதிகள்[தொகு]
கிபி எட்டாம் நூற்றாண்டில் சமண திவாகர முனிவர் இயற்றிய திவாகர நிகண்டும், கிபி பத்தாம் நூற்றாண்டில் பிங்கல முனிவர் இயற்றிய பிங்கல நிகண்டும், கிபி பதினாறாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சூடாமணி நிகண்டும், தமிழ் மொழிக்கு வளம் சேர்த்தன.
கோயில்கள்[தொகு]
பாண்டிய நாட்டில் 26 சமணக் குடைவரைகளும், 200 கல் படுக்கைகளும், 60 கல்வெட்டுகளும் உள்ளது. மேலும் சமணத் துறவிகள் தமிழ் காப்பியங்களும், தமிழ் இலக்கண நூல்களும், அகராதிகளும் எழுதினர். [10]
கிபி 7 - 8-ஆம் நூற்றாண்டின் சித்தனானவாசல் குகைகள் சமண ஓவியக் கலைக்கும், குடைவரைகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும். மேலும் சித்தன்னவாசல் மலைகளில் சமணத்துறவிகளின் ஏழடிப்பட்டம் சமணர் படுக்கைகள் கல்வெட்டுகள், கிமு 2-ஆம் நூற்றாண்டின் தமிழ் பிராமி எழுத்துகள் மற்றும் கிபி எட்டாம் நூற்றாண்டின் தமிழ் எழுத்துகளில், இம்மலையில் வாழ்ந்த சமணத் துறவிகளின் பெயர்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. [11]
கிபி எட்டாம் நூற்றாண்டின் கழுகுமலை சமணர் படுகைகள், தமிழகத்தில் சமணத்தின் மறுமலர்ச்சிக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. கழுகுமலைக் குகைக் கோயிலை பாண்டிய மன்னர் பராந்தக நெடுஞ்செழியன் எழுப்பினார்.[12]
தமிழ்ச் சமணர்களின் சமயத் தலைமையிடமாக மேல்சித்தாமூர் சமண மடம் விளங்குகிறது.[13]
வீழ்ச்சி[தொகு]
சமணத்திற்கு தமிழக மன்னர்களின் ஆதரவு குறைந்த காரணத்தினால், சமணம் படிப்படியாக தமிழகத்தில் வீழ்ச்சியடைந்தது.[14] பல்லவ மன்னர் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் கிபி (கிபி 600 - 630), அப்பரின் தூண்டுதலால் சமணத்திலிருந்து, சைவ சமயத்திற்கு மாறினார்.[15] இப்பல்லவ மன்னர் இயற்றிய மத்தவிலாசம் எனும் நூல் சமணம் மற்றும் பௌத்தத் துறவிகளை எள்ளிநகையாடியது.[16] கிபி ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர், பாண்டிய மன்னர் கூன் பாண்டியனை, சமணத்திலிருந்து சைவ சமயத்திற்கு மதம் மாற்றினார்.
சமணக் குடைவரைக் கோயில்கள், படுகைகள் மற்றும் கோயில்கள்[தொகு]
- சிதறால் மலைக் கோவில்
- திருமலை சமணர் கோயில் வளாகம்
- கழுகுமலை சமணர் படுகைகள்
- திறக்கோயில்
- திருமலை சமணர் கோயில் வளாகம்
- திரைலோக்கியநாதர் கோயில்
- கொங்கர்புளியங்குளம் சமணர் மலை
- கருங்காலக்குடி சமணர் படுகைகள்
- சமணர் மலை, மதுரை
- யானைமலை, மதுரை
- கீழவளவு
- மாங்குளம்
- சித்தன்னவாசல்
- ஆர்மா மலைக் குகை
- ஓணம்பாக்கம்
- சோழபாண்டியபுரம்
- நேகனூர்பட்டி
- எண்ணாயிரம்
- மேல் சித்தாமூர் சமணர் கோயில்
- அனுமந்தக்குடி சமணக் கோயில்
- கரந்தை ஆதீஸ்வரசுவாமி ஜினாலயம்
- கும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம்
- கும்பகோணம் சுவேதாம்பரர் சமணக்கோயில்
- சமணக் காஞ்சி
- சீயமங்கலம்
- தீபங்குடி தீபநாயகசுவாமி ஜினாலயம்
- பாரீசுவ ஜீனாலயம்
- பூண்டி அருகர் கோயில்
- மன்னார்குடி மல்லிநாதசுவாமி ஜினாலயம்
- விஜயமங்கலம் சமணக்கோவில்
- திருநாதர் குன்றுகள்
16 மீட்டர் உயரம் கொண்ட நேமிநாதர் சிலை, திருமலை சமணர் கோயில் வளாகம்
கிபி எட்டாம் நூற்றாண்டின் பார்சுவநாதர் சிலை, திரைலோக்கியநாதர் கோயில்
கிபி 8-ஆம் நூற்றாண்டின் மகாவீரர் சிலை, குறத்தி மலை, ஓணம்பாக்கம்
9-ஆம் நூற்றாண்டின் சமணர் படுகை, கீழவளவு, மதுரை மாவட்டம்
மகாவீரர் புடைப்புச் சிற்பம், சமணர் மலை, மதுரை
சமணச் சிற்பங்கள், யானைமலை, மதுரை
கிபி 425-க்கு முந்தைய சிதறால் மலைக் கோவில்
9-ஆம் நூற்றாண்டின் சீயமங்கலம் குடைவரைக் கோயில்
மடங்கள்[தொகு]
கோயில் விமானம், திருப்பருத்திருக்குன்றம், சமணக் காஞ்சி
திரைலோக்கியநாதர் கோயில் ஓவியம்
செஞ்சி சமணக் கோயில்,
இதனையும் காண்க[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- Tamilnadu Jain Heritage
- தமிழ்நாட்டில் சமண சமயம் - காணொளி
- சமணம் பாடம் 1 - காணொளி
- சமணம் பாடம் 2 - காணொளி
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Eighth century artefacts on Jainism at Rockfort lie neglected, damaged", தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 16 July 2016
- ↑ Hermann Kulke; Dietmar Rothermund (2007). A History of India (4th ). London: Routledge. பக். 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780415329200. https://books.google.co.in/books?id=RoW9GuFJ9GIC. பார்த்த நாள்: 7 September 2016.
- ↑ http://www.thehindu.com/thread/arts-culture-society/article8179948.ece
- ↑ "Chitharal". பார்த்த நாள் 23 March 2017.
- ↑ "Pandya dynasty" (en). பார்த்த நாள் 2 June 2017.
- ↑ Sastri 2002, பக். 339.
- ↑ Cush, Robinson & York 2012, பக். 515, 839.
- ↑ Zvelebil 1992, பக். 13–16.
- ↑ Dundas 2002, பக். 116–117.
- ↑ S. S. Kavitha (31 October 2012), "Namma Madurai: History hidden inside a cave", தி இந்து
- ↑ S. S. Kavitha (3 February 2010), "Preserving the past", தி இந்து
- ↑ "Arittapatti inscription throws light on Jainism", தி இந்து, 15 September 2003
- ↑ Sangave, Vilas Adinath (2001). Facets of Jainology: Selected Research Papers on Jain Society, Religion, and Culture. Popular Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788171548392. https://books.google.co.in/books?id=2FGSGmP4jNcC. பார்த்த நாள்: 2012-05-27.
- ↑ Natubhai Shah 2004, பக். 69–70.
- ↑ Lochtefeld 2002, பக். 409.
- ↑ Arunachalam 1981, பக். 170.
உசாத்துணை[தொகு]
- Shah, Natubhai (2004) [First published in 1998], Jainism: The World of Conquerors, I, Motilal Banarsidass, ISBN 81-208-1938-1
- Lochtefeld, James G. (2002), The Illustrated Encyclopedia of Hinduism: A-M, 1, The Rosen Publishing Group, ISBN 978-0-8239-3179-8
- Arunachalam, M., ed. (1981), Aintām Ulakat Tamil̲ Mānāṭu-Karuttaraṅku Āyvuk Kaṭṭuraikaḷ, International Association of Tamil Research
- Das, Sisir Kumar (2005), A History of Indian Literature, 500–1399: From Courtly to the Popular, Sahitya Akademi, ISBN 978-81-260-2171-0
- Freiberger, Oliver (2006), Asceticism and Its Critics: Historical Accounts and Comparative Perspectives, Oxford University Press, ISBN 978-0-1997-1901-3
- Cort, John E., ed. (1998), Open Boundaries: Jain Communities and Cultures in Indian History, SUNY Press, ISBN 0-7914-3785-X
- Cush, Denise; Robinson, Catherine; York, Michael (2012), Encyclopedia of Hinduism, Routledge, ISBN 978-1-135-18978-5
- Zvelebil, Kamil (1992), Companion Studies to the History of Tamil Literature, BRILL Academic, ISBN 90-04-09365-6
- Spuler, Bertold (1952), Handbook of Oriental Studies, BRILL, ISBN 90-04-04190-7
- Dundas, Paul (2002) [1992], The Jains (Second ed.), இலண்டன் and New York: Routledge, ISBN 0-415-26605-X
- Sastri, K. A. N. (2002) [1955], A History of South India: From Prehistoric Times to the Fall of Vijayanagar, Oxford University Press