உதயணகுமார காவியம்
Jump to navigation
Jump to search
உதயணகுமார காவியம் தமிழில் தொகுத்துக் காட்டப்பட்டுள்ள ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும்.[1]
இது குணாட்டியர் என்பவர் வடமொழியில் எழுதிய பிருகத் கதா என்னும் நூலைத் தழுவித் தமிழில் கொங்குவேளிர் என்பவர் 7ஆம் நூற்றாண்டில் செய்த பெருங்கதை என்னும் நூலின் சுருக்கநூல்.
- இதன் காலம் 15ஆம் நூற்றாண்டு.
உதயணன் என்பவனின் கதையை இது கூறுகிறது.
கதைப்படி உதயணன் கௌசாம்பி நாட்டு இளவரசன் ஆவான்.
உதயணகுமார காவியம் உதயணனின் கதையை மிகச் சுருக்கமாக 367 விருத்தப்பாக்களில் தருகிறது. இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன. இது சமண சமயத்தைச் சார்ந்த ஒரு நூல்.
பல்வேறு தமிழ் நூல்களைப் பதிப்பித்தவரான உ. வே. சாமிநாத ஐயர் இந்நூலை 1935 ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டார்.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
கருவிநூல்[தொகு]
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்பு[தொகு]
- ↑ உண்மையில் இந்த நூலில் காப்பியப் பண்புகள் இல்லை என்பது மு. அருணாசலம் கருத்து