பஞ்ச-பரமேட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இக் குறு உருவம் சித்தசீலத்தில் வாழும் பஞ்சபரமேட்டிகளைச் சித்தரிக்கிறது. பிராகிருத மொழி மூலத்தையும் இடையிட்ட குசராத்தி மொழி உரையையும் கொண்ட, சிறீசந்திரரால் எழுதப்பட்ட சங்கிரகணீரத்னத்தின் ஓலை நறுக்கு, 17ம் நூற்றாண்டு (பிரித்தானிய நூலகம்)
பஞ்ச-பரமேட்டிகளை விளக்கும் புடைப்புச் சிற்பம் (புகைப்படம்: சிறீ மகாவீர்சி சமணக்கோயில்)

சமணத்தில் பஞ்ச-பரமேட்டிகள் (சமக்கிருதம்: पञ्च परमेष्ठी "ஐந்து உயருயிரிகள்") என்போர் வணங்கத்தக்க, ஐந்து அடுக்கு சமயத் தலைவர்களாவர்.[1][2]

மேலோட்டம்[தொகு]

ஐந்து உயருயிரிகளும் பின்வருவோராவர்:

 1. அருகதர்: விழிப்புணர்வு பெற்ற, கேவல ஞானத்தை அடைந்த அனைத்து உயிர்களும் அருகதர்களாகக் கருதப்படுவர். 24 தீர்த்தங்கரர்கள் அல்லது சினர்கள் எனப்படும் தற்போதைய காலச்சுழற்சியில் சமண மதத்தை நிறுவியவர்களாகக் கருதப்படும் அனைவரும் அருகதர்களாவர். அனைத்துத் தீர்த்தங்கரர்களும் அருகதர்களாயினும், அனைத்து அருகதர்களும் தீர்த்தங்கரர்களல்ல.[2]
 2. சித்தர் (அசிரி): பிறப்பு மற்றும் இறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலையடைந்த உயிர்கள்.
 3. ஆச்சாரியர்
 4. உபாத்தியாயர் ("நல்வழிப்படுத்துவோர்")
 5. முனி அல்லது சமணத் துறவிகள்

இவ்வைந்து பேரின் முதலெழுத்துக்களாகிய அ+அ+அ+உ+ம என்பன இணைக்கப்பட்டு அசைச்சொல்லாகிய ஓம் உருவாகிறது.[1]

ஐந்து உயருயிரிகள்[தொகு]

பஞ்ச-பரமேட்டிகளிடம் (ஐந்து உயருயிரிகள்) இறைஞ்சுதல்

திரவியசங்கிரகம் எனும் முக்கிய சமண நூல் ஐந்து உயருயிரிகளின் (பஞ்ச பரமேட்டிகள்) இயல்புகளைச் சுருக்கமாக வரையறுக்கின்றது.[3]

 1. உலக ஆசிரியரின் (அருகதர்) வரையறை - வரி 50.[4]
 2. விடுதலையடைந்த உயிர்களின் (சித்தர்) வரையறை - வரி 51.[5]
 3. முதன்மை நல்வழிப்படுத்துவோரின் (ஆச்சாரியர்) வரையறை - வரி 52.
 4. நல்வழிப்படுத்துவோரின் (உபாத்தியாயர்) வரையறை - வரி 53.
 5. துறவியின் (சாது) வரையறை - வரி 54.

அருகதர்[தொகு]

நான்கு கொடிய கர்மங்களை (காதிய கர்மங்கள்) ஒழித்த, முடிவில் நம்பிக்கை, மகிழ்ச்சி, அறிவு மற்றும் வலுப் பொருந்திய, மிகவும் நற்குறி பொருந்திய உடலில் வாழுகின்ற (பரமௌதாரிக சாரீர), தூய உயிரியான அவ் உலக ஆசிரியர் (அருகதர்) தியானிக்கத் தக்கவராவார்.

மேலும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 Jaini, Padmanabh S. (1998). The Jaina Path Of Purification. Motilal Banarsidass. பக். 163. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120815780. https://books.google.com/books?id=wE6v6ahxHi8C&q=kalyanaka+bhumi&pg=PA343. பார்த்த நாள்: 10 December 2012. 
 2. 2.0 2.1 Shah, Natubhai (1998). Jainism: The World of Conquerors, Volume 1. Sussex Academic Press. பக். 174. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781898723301. https://books.google.com/books?id=EmVzvUzbwegC&q=jain+rituals&pg=PA169. பார்த்த நாள்: 14 December 2012. 
 3. Jain 2013, பக். 177-196.
 4. 4.0 4.1 Jain 2013, பக். 177.
 5. Jain 2013, பக். 182.
 6. Jain 2013, பக். 173.

மேற்கோள்கள்[தொகு]

 • Johnson, Helen M. (1931), The 108 Qualities of the Pañcaparameṣṭhins (Appendix 1.5 of the Trishashti Shalaka Purusha Caritra), Baroda Oriental Institute
 • Jain, Vijay K. (2013), Ācārya Nemichandra's Dravyasaṃgraha, ISBN 9788190363952, Non-copyright
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்ச-பரமேட்டிகள்&oldid=3276311" இருந்து மீள்விக்கப்பட்டது