உள்ளடக்கத்துக்குச் செல்

பொன்னம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொன்னம்பட்டி பேரூராட்சி திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். 2017-இல் பொன்னம்பட்டி ஐ எஸ் ஓ (ISO 9001:2015) தரச்சான்றிதழ் பெற்றுள்ளது.[1] இதன் அஞ்சல் சுட்டு எண் 621314 ஆகும்.

அமைவிடம்

[தொகு]

பொன்னம்பட்டி பேரூராட்சியின் அலுவலகம், மதுரை - திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், துவரங்குறிச்சியில் உள்ளது. [2] பொன்னம்பட்டி பேரூராட்சிக்கு அருகமைந்த தொடருந்து நிலையம், 32 கிமீ தொலைவில் அமைந்த மணப்பாறை ஆகும்.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

10.83 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 29 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மருங்காபுரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2686 வீடுகளும், 12167 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னம்பட்டி&oldid=2682694" இலிருந்து மீள்விக்கப்பட்டது