திருச்சிராப்பள்ளி மாநகராட்சி
தமிழ் நாடு
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி இக்கட்டுரை |
ஏனைய மாவட்ட்ங்கள் · அரசியல் நுழைவு தமிழக உள்ளாட்சி நுழைவு |
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான திருச்சி மாவட்ட மாநகராட்சியாகும். இது உள்ளாட்சி அமைப்பின் படி ஓர் மாநகராட்சி ஆகும். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூருக்கு அடுத்த மூன்றாவது மிகப்பெரிய மாநகராட்சி இதுவே ஆகும். இது முதன்முதலில் நகராட்சியாக நிறுப்பட்டது 08.07.1866 . பின் மாநகராட்சியாக 01.06.1994 உயர்த்தப்பட்டது. இந்த மாநகராட்சியை ஒட்டியுள்ள துவாக்குடி, திருவெறும்பூர் நகராட்சிகளை திருச்சியுடன் இணைக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதனடிப்படையில் இந்த மாநகராட்சி நான்கு மிகப்பெரிய மண்டலங்களையும் நூறு (100) வார்டுகளையும் கொண்டுள்ளது.இந்த மாநகராட்சி சென்னை, கோயம்புத்தூர் மாநகராட்சிகளைப் போலவே பல நகராட்சிகளைக் கொண்டுள்ளது. அதனடிப்படையில் அரியமங்கலம்,அபிஷேகபுரம்,பொன்மலை, திருவரங்கம், துவாக்குடி, ஆகிய நகராட்சிகளையும் திருவெறும்பூர் பேரூராட்சிகளையும் உள்ளடக்கி உள்ளது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் 615 கோடி ரூபாய் ஆகும். இது தமிழக மாநகராட்சிகளின் வரி வருவாயில் மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி തിരുച്ചിറപ്പള്ളി കോർപ്പറേഷൻ | |
---|---|
Logo | |
வகை | |
வகை | |
தலைமை | |
---.--- office suspended due to postponed elections முதல் | |
---.--- office suspended due to postponed elections முதல் | |
N. ரவிச்சந்திரன் முதல் | |
S.சிவராசு, IAS முதல் | |
கூடும் இடம் | |
![]() | |
Trichy municipal corporation building | |
வலைத்தளம் | |
www.trichycorporation.gov.in |
மாநகராட்சி பகுதிகள்[தொகு]
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி |
---|
திருவரங்கம் |
பொன்மலை |
கோ அபிசேகபுரம் |
அரியமங்கலம் |
திருவெறும்பூர் |
கே.சாத்தனூர் (வடக்கு,தெற்கு) - ஸ்ரீரங்கம் |
மேலக்கல்கண்டார்கோட்டை,ஆலத்தூர்,பாண்டமங்கலம் |
ஊராட்சிகள் |
பணயக்குறிச்சி |
உக்கடை அரியமங்கலம் |
பண்டமங்கள்ம் |
திருவளர் சோலை |
உய்யகொண்டான் திருமலை |
தங்கப் பாறை தொடர்வண்டித் தொழிற்கூடக் குடியிருப்பு |
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி[தொகு]
பரப்பளவு | |||
---|---|---|---|
167 ச.கிமீ | |||
மக்கள் தொகை | |||
2011 கணக்கெடுப்பின்படி | 10,22,518 | ||
மண்டலங்கள் | |||
திருவரங்கம் | அரியமங்கலம் | பொன்மலை | கோ.அபிஷேகபுரம் |
மாநகராட்சி மொத்த வார்டுகள் | |||
100 | |||
இம்மன்றத்திற்காக அமைக்கபெற்ற நிலைக்குழுக்கள் | |||
கணக்குக் குழு | |||
கல்விக்குழு | |||
சுகாதாரக் குழு | |||
வரிவிதிப்பு மற்றும் நிதிக் குழு | |||
நகரமைப்புக் குழு | |||
வேலைக் குழு |
மாநகராட்சி சிறப்பு[தொகு]
- தமிழகத்தின் வேறு எந்த மாநகராட்சிக்கும் இல்லாத சிறப்பு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உண்டு.
- தமிழக மாநிலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
- தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தும் சுமார் நான்கு மணி முதல் ஆறு மணி நேர பயணத்தில் திருச்சியை வந்தடைய முடியும்.
- திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு வருடம் முழுவதும் சுவை மிகுந்த காவிரி நீர் தடையின்றி கிடைக்கிறது.
- சென்னை, கோயம்புத்தூர்க்கு அடுத்து அதிகமாக சர்வதேச விமானங்கள் இங்கு தான் தரையிரக்கப்படுகின்றன.
- டெல்டா மாவட்டங்களின் தலைநகரமாக போற்றப்படுகிறது.