வேலூர் மாநகராட்சி
வேலூர் மாநகராட்சி | |
---|---|
வகை | |
வகை | |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 1 ஆகஸ்டு 2008 |
தலைமை | |
மேயர் | சுஜாதா ஆனந்தகுமார், திமுக 4 மார்ச் 2022 முதல் |
துணை மேயர் | சுனில், திமுக 4 மார்ச் 2022 முதல் |
மாநகராட்சி ஆணையாளர் | ரத்தினசாமி, இ.ஆ.ப |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 60 |
அரசியல் குழுக்கள் | ஆளும் கட்சி (45)
எதிர் கட்சியினர் (9) மற்றவர்கள் (6)
|
வேலூர் மாநகராட்சி. இந்தியா துணைக் கண்டத்தின் தமிழ்நாடு மாநிலத்தின் மாவட்டமான வேலூர், மாநகராட்சி அமைப்பாக, 1866 இல் உருவாக்கப்பட்ட நகர மேம்பாட்டு சட்டம் 1865, இன்படி, ஆகஸ்டு 1,2008[1] முதல், வேலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இம்மாநகராட்சி, மேயர், துணை மேயர் உள்ளிட்ட 60 மாமன்ற உறுப்பினர்களைக் கொண்டது. காட்பாடி பேரூராட்சி வேலூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.இந்த மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் 100 கோடி ரூபாய் ஆகும்.
வரலாறு
[தொகு]வேலூர் நகராட்சி மன்றம், 1920[1] இல் எம்.டி.எம். சட்டம் 1920 -இன் படி அன்றைய காலகட்டத்திலேயே உருவாக்கப்பட்டது. அதன் பின் இரண்டாம் நிலை நகராட்சியாக 1947[1] யிலும், பின் முதல் நிலை நகராட்சியாக 1979[1] யிலும் உயர்த்தப்பட்டது. ஆரம்ப காலகட்டத்தில் இதன் நகராட்சி அமைப்புகளுக்குள் உள்ளடங்கிய நகரப் பகுதிகளாக கோட்டை, அடவாநந்தல், பெரிபேட்டை, வேலப்பாடி, சலவன்பேட்டை, தொட்டப்பாளையம், அருகந்தம்பூண்டி, கொசப்பேட்டை, கவரைப்பேட்டை, பொறுப்பங்காடி (கமிசரி பசார்) மற்றும் சங்கரன்பாளையம் போன்றவையிருந்தன. 2011-க்குப் பின்னர், காட்பாடி, வேலூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
மாநகராட்சி தேர்தல், 2022
[தொகு]2022-ஆம் ஆண்டில் வேலூர் மாநகராட்சியின் 60 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 45 வார்டுகளையும், அதிமுக 7 வார்டுகளையும், பாரதிய ஜனதா கட்சி 1 வார்டையும், பாமக 1 வார்டையும், சுயேச்சைகள் 6 வார்டுகளையும் கைப்பற்றினர். மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில், திமுகவின் சுஜாதா ஆனந்தகுமார் மேயராகவும், துணை மேயராக சுனிலும் வெற்றி பெற்றனர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 வேலூர் மாநகராட்சியை பற்றி- மாநகராட்சி இணையம் பரணிடப்பட்டது 2013-01-24 at the வந்தவழி இயந்திரம்பார்த்துப் பரணிடப்பட்ட நாள் 20-04-2009
- ↑ வேலூர் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் 2022
வெளி இணைப்புக்கள்
[தொகு]- வேலூர் மாநகராட்சி இணையம் பரணிடப்பட்டது 2009-04-05 at the வந்தவழி இயந்திரம்