திருவலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவலம்
பேரூராட்சி
திருவலம் சிவன் கோயில் தேர்
திருவலம் சிவன் கோயில் தேர்
திருவலம் is located in தமிழ் நாடு
திருவலம்
திருவலம்
தமிழ்நாட்டில் திருவலம்
ஆள்கூறுகள்: 12°58′26″N 79°11′38″E / 12.974°N 79.194°E / 12.974; 79.194ஆள்கூறுகள்: 12°58′26″N 79°11′38″E / 12.974°N 79.194°E / 12.974; 79.194
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்வேலூர்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்9,153
மொழி
 • அலுவலல்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்632515
தொலைபேசி குறியீடு416 2236xxx
இணையதளம்www.townpanchayat.in/thiruvalam
திருவலம் பொன்னையாறு மேம்பாலம், பிரித்தானிய இந்தியா ஆட்சியில் கட்டப்பட்டது

திருவலம் (Thiruvalam), தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும்.

இப்பேரூராட்சி விவசாயம் பிரதான தொழிலாக விளங்கிறது. இங்கு வில்வநாதீஸ்வரார் திருக்கோயில் கஞ்சனகிரி மலையை நோக்கியவாறு உள்ளது. இக்கோயிலில் சிவானந்த மௌனகுரு சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்தள்ளது.

அமைவிடம்[தொகு]

திருவலம் பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடமான வேலூரிலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு திருவலம் தொடருந்து நிலையம் 2 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே கிழக்கிலும், தெற்கிலும் ராணிப்பேட்டை 12 கிமீ; மேற்கில் காட்பாடி 13 கிமீ; வடக்கில் பொன்னை 22 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

9.47 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 45 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி காட்பாடி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [1]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,215 வீடுகளும், 9,153 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 84.50% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 998 பெண்கள் வீதம் உள்ளனர்.[2]

ஆதாரங்கள்[தொகு]

  1. திருவலம் பேரூராட்சியின் இணையதளம்
  2. Thiruvalam Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவலம்&oldid=2698973" இருந்து மீள்விக்கப்பட்டது