தூத்துக்குடி மாநகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ் நாடு
தூத்துக்குடி மாநகராட்சி
TamilNadu Logo.svg

இக்கட்டுரை
தமிழக உள்ளாட்சி அமைப்புகள்
என்ற தொடரில் ஒரு பகுதி

ThoothukudicorpnLogo.gif

ஏனைய மாவட்டங்கள் ·  அரசியல் நுழைவு
தமிழக உள்ளாட்சி நுழைவு

தூத்துக்குடி மாநகராட்சி- இந்தியாவின் மாநிலமான தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகும். இது மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள மாநகராட்சியாகும். தூத்துக்குடி ஒரு துறைமுக நகரமாகும். தூத்துக்குடி மாநகராட்சி, தூத்துக்குடி அத்திமரப்பட்டி, குமரகிரி, மாப்பிள்ளை ஊரணி, மீளவிட்டான், முத்தையாபுரம் மற்றும் சங்கரப்பேரி ஆகிய பகுதிகளைக் கொண்டது. இந்த மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் ஆகும்.

Yrv650Dr 400x400.jpg

தூத்துக்குடி மாநகராட்சி தமிழகத்தின் சிறப்புமிக்க மாநகராட்சியாகவும், மக்கள் தொகையின் அடிப்படையில் ஆறாவது படி நிலையில் உள்ள மாநகராட்சியாகும். இங்குள்ள மூன்று முக்கியச் சாலைகள் மதுரையும், திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலியை இணைக்கின்றது.

பரப்பளவு
13.47 ச. கிமீ
மக்கள் தொகை
2011 கணக்கெடுப்பின்படி 4,11,628

மாநகராட்சி அலுவலகம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து 8 கிமீ தொலைவில் மேற்கு கிரேட் காட்டன் சாலையில் அமைந்துள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி[தொகு]

தற்பொழுதய தூத்துக்குடி மாநகராட்சி செயலாட்சியர்கள் மற்றும் உறுப்பினர்கள்
ஆணையர் மேயர் துணை மேயர் மாநகராட்சி உறுப்பினர்கள்
60

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 13.47 சகிமீ பரப்பும், 51 மாமன்ற உறுப்பினர்களையும் கொண்ட தூத்துக்குடி மாநகராட்சியின் மொத்த மக்கள்தொகை 4,11,628 ஆகும். அதில் 2,05,958 ஆண்களும், 2,05,670 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 91.57 % மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 999 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 970 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.மக்கள்தொகையில் இந்துக்கள் 64.97 %, இசுலாமியர்கள் 4.74 %, கிறித்தவர்கள் 30.14 % மற்றும் பிறர் 0.15% ஆகவுள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. தூத்துக்குடி மாநகராட்சியின் மக்கள்தொகை பரம்பல்

வெளி இணைப்புக்கள்[தொகு]

தூத்துக்குடி மாநகராட்சி இணையத் தளம்[தொடர்பிழந்த இணைப்பு]