ஸ்ரீவைகுண்டம் வட்டம்
சிரீவைகுண்டம் வட்டம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக சிரீவைகுண்டம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் வல்லநாடு, தெய்வச்செயல்புரம், செய்துங்கநல்லூர், ஆறுமுகங்குளம், சிரீவைகுண்டம் என ஆறு உள்வட்டங்களும், சேரகுளம், காரசேரி, அரசர்குளம், வள்ளுவர் காலனி, தாதன்குளம், கருங்குளம், ஆதிச்சநல்லூர், கால்வாய், வெள்ளூர் உட்பட 69 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]இவ்வட்டத்தில் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. திருவைகுண்டம் வட்டத்தில் நவகைலாய கோயில்கள் உள்ளன. உலக நாகரிகத்தின் தொட்டில் ஆதிச்சநல்லூரும் இவ்வட்டத்தில் அமைந்துள்ளதால் கூடுதல் சிறப்பு.
மக்கள்தொகை பரம்பல்[தொகு]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது. [3]
- மக்கள்தொகை = 202,962
- ஆண்கள் = 100,416
- பெண்கள் = 102,546
- குடும்பங்கள் = 52,689
- கிராமப்புற மக்கள்தொகை % = 77.7%
- எழுத்தறிவு = 85.29%
- பாலின விகிதம் = 1,000 ஆண்களுக்கு, 1,021பெண்கள்
- 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 22272
- குழந்தைகள் பாலின விகிதம் = 1000 ஆண் குழந்தைகளுக்கு, 958 பெண் குழந்தைகள்
- பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் = 47,082 மற்றும் 1,274
சமயம்[தொகு]
- இந்துக்கள் = 82.85%
- இசுலாமியர்கள் = 6.04%
- கிறித்தவர்கள் = 10.86%
- பிறர்= 0.25%
மேற்கோள்கள்[தொகு]
- ↑ தூத்துக்குடி மாவட்ட வட்டங்கள்
- ↑ ஸ்ரீவைகுண்டம் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- ↑ [Srivaikundam Taluka Population, Caste, Religion Census Data 2011]