உடன்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உடன்குடி
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
வட்டம் திருச்செந்தூர்
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்களவைத் தொகுதி உடன்குடி
மக்கள் தொகை 19,347 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

உடன்குடி (ஆங்கிலம்:Udangudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,348 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். உடன்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. உடன்குடி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இங்கு இந்து,முஸ்லிம் ,கிருத்துவ மக்கள் சம எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.

பெயர்க்காரணம்[தொகு]

உடன்குடி என்ற சொல் இரண்டு தமிழ் வார்த்தைகளில் இருந்து உருவானது.'உடை'என்பது இந்த ஊரைச் சுற்றி உடை மரங்கள் இருந்தன. 'குடி' என்பது கிராமம் அல்லது மக்கள் கூட்டம்.இந்த இரண்டு வார்த்தைகளும் சேர்ந்து 'உடன்குடி' என்றானது. இங்கு இந்து,முஸ்லிம்,கிருத்துவ மக்கள் சம எண்ணிக்கையிலும் ஒற்றுமையுடனும் வாழ்வதால் இந்தப் பெயர் வந்தது என்று சிலர் கூறுகின்றனர்

சிறப்புகள்[தொகு]

தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் கருப்பட்டிகளில் உடன்குடி பகுதிக் கருப்பட்டி சுத்தம் மற்றும் சுவைக்குச் சிறப்புப் பெயர் பெற்றதாகும்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.


"https://ta.wikipedia.org/w/index.php?title=உடன்குடி&oldid=2444274" இருந்து மீள்விக்கப்பட்டது