சாத்தான்குளம் வட்டம்
Appearance
சாத்தான்குளம் வட்டம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக சாத்தான்குளம் நகரம் உள்ளது. சாத்தான்குளம் வட்டத்தின் கீழ் 25 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]இவ்வட்டத்தில் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 10 ஊராட்சிகளும் உள்ளன. வரலாற்று சிறப்புமிக்க பன்னம்பாறை என்னும் கிராமம் சாத்தான்குளத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பின்வருமாறு உள்ளது. [3]
- மக்கள்தொகை = 98,690
- ஆண்கள் = 47,617
- பெண்கள் = 51,073
- குடும்பங்கள் = 25,971
- கிராமப்புற மக்கள்தொகை = 85.6%
- எழுத்தறிவு = 89.58%
- பாலின விகிதம் = 1,000 ஆண்களுக்கு, 1,073 பெண்கள்
- 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 10125
- குழந்தைகள் பாலின விகிதம் = 1000 ஆண் குழந்தைகளுக்கு, 957 பெண் குழந்தைகள்
- பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் = 9,118 மற்றும் 73
சமயம்
[தொகு]- இந்துக்கள் = 62.19%
- இசுலாமியர்கள் = 1.78%
- கிறித்தவர்கள் = 35.94%
- பிறர்= 0.09%