உள்ளடக்கத்துக்குச் செல்

கழுகுமலை சமணர் படுகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கழுகுமலை சமணர் படுகைகள்
கழுகுமலை சமணச் சிற்பங்கள்
கழுகுமலை சமணச் சிற்பங்கள்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கழுகுமலை, தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு
புவியியல் ஆள்கூறுகள்9°09′02″N 77°42′15″E / 9.15056°N 77.70417°E / 9.15056; 77.70417
சமயம்சமணம்
இணையத்
தளம்
kalugumalaitemple.tnhrce.in

கழுகுமலை சமணர் படுக்கைகள்[1] (Kalugumalai Jain beds), தமிழ்நாடு மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகுமலை எனும் ஊரில் அமைந்துள்ளது. இச்சமணர் படுக்கைகள் கோவில்பட்டிலிருந்து 22 கி.மீ. தொலைவில் கழுகுமலை பேரூராட்சியில் உள்ளது.

இச்சமணக் கல் படுக்கைகள் குடைவரை கட்டிட அமைப்பில், பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் (பொ.ஊ. 768–800) அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.[2] இங்கு திகம்பர சமணத் துறவிகள் தங்கி, சமண சமயத்தை பரப்பினர்.

இச்சமணப் படுக்கைகளுக்கு அருகில் பொ.ஊ. 8ம் நூற்றாண்டின் சிவன் கோயில், கழுகுமலை வெட்டுவான் கோயில் மற்றும் கழுகுமலை முருகன் கோயில் அமைந்துள்ளது.

இச்சமண படுகைகளில் மகாவீரர், பாகுபலி, பார்சுவநாதர் போன்ற 150 தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. கழுகுமலை சமணர் படுகைகள், தமிழகத் தொல்லியல் துறை பராமரிக்கிறது.

கல்வெட்டுச் செய்தி

[தொகு]

இங்கு வட்டெழுத்துகளால் ஆன கல்வெட்டுகள் உள்ளன. அவை பாண்டிய மன்னன் வீரநாராயணன் காலத்தவை. அவற்றில் சமணர் கோயில் திருமேனி செய்ய நன்கொடை அளித்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. [3]

இதில் ‘குரத்தி’ சமணப் பெண் துறவியைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘குரத்திகள்’ ’குரவடிகள்’ என்னும் சொற்கள் ‘அடிகள்’ [4] என்னும் சொல் பிறந்த பாங்கை உணர்த்துகின்றன.

"செய்வித்த திருமேனி" என்னும் குறிப்புடன் சிலரது பெயர்கள் இக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. [5]

இந்தக் கல்வெட்டுகளில் மாணாக்கன் என்னும் சொல் ‘ஆசிரியரின் மாண்பைப் பெற்றவன்’ என்னும் பொருளில் கையாளப்பட்டிருப்பதை உணரமுடிகிறது.

பாகுபலி மற்றும் பார்சுவநாதர் சிற்பங்கள்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dundas, Paul (2003). The Jains. Routledge. pp. 125–6. ISBN 9781134501656.
  2. "Sthala Varalaru". Hindu Religious and Endowment Board, தமிழ்நாடு அரசு. 2015. Archived from the original on 17 நவம்பர் 2015. Retrieved 4 November 2015.
  3. வாசுகி பாகுபலி பெ., கட்டுரை "தமிழகத் தொல்சின்னங்கள்", அருகன் தத்துவம் (மாத இதழ்), ஆகஸ்டு 2025, பக்கம் 30 முதல்
  4. இளங்காவடிகள்
  5. ஸ்ரீ கடைக்காட்டூர் திருமலையார் மோனி படாரர் மாணாக்கர் தயாபால பெரியார்
    ஸ்ரீ குணசேகர படாரர் சீடன் பேரெயிற்குடி சாத்தந்தேவன்
    ஸ்ரீ இவ்வூர் புரயன் சேந்தனை சாத்திய சேந்தசெரியன்
    ஸ்ரீ திருக்கோட்டாற்று பாதமூலத்தான் தன்மம் புட்பநந்தி
    ஸ்ரீ மாலைக்குளத்து ஸ்ரீவர்த்தமான ஏனாதி குந்தனஞ்சாத்தி
    ஸ்ரீ திருநறுங்கொண்டை (பல)தேவ குரவடிகள் மாணாக்கர் கனகவிர அடிகள்
    ஸ்ரீ வெண்புனாட்டுக் குறண்டி இயக்கங்(காடி)
    ஸ்ரீ திருமலைக் குரத்திகள் மாணாக்கன் ஏனாதி குந்தனஞ்சாத்தி
    ஸ்ரீ நாலூர் ஏனாதி மாகணக் குரத்தி

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கழுகுமலை_சமணர்_படுகைகள்&oldid=4602655" இலிருந்து மீள்விக்கப்பட்டது