நவதிருப்பதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நவதிருப்பதி என்பது இந்தியாவில், தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள 9 முக்கிய இந்து வைணவ தலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புப் பெயராகும். இந்த ஒன்பது தலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நவக்கிரகத்துக்கு உரியவையாக விளங்குகின்றன. இவை திவ்ய தேசங்களாகவும் உள்ளன.

நவக்கிரங்கள்[தொகு]

நவக்கிரகங்கள் பொதுவாக இந்து சைவ வழிபாட்டுத்தலங்களில் முக்கிய பங்கு வகிப்பன. நவதிருப்பதி என அழைக்கப்படும் ஒன்பது வைணவ தலங்களும், நவக்கிரகங்களுடன் தொடர்புடையவையாகக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவக்கிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது.[1][2]

சோழநாட்டில் அமைந்துள்ள நவக்கிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவக்கிரகங்களாகப் போற்றப்படுகின்றன. இங்கு பெருமாளே நவக்கிரகங்‌களாகச் செயல்படுவதால் நவக்கிரகங்களுக்கு என தனியே சந்நிதி அமைக்கப்படுவதில்லை. அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும் என்பது தொன்நம்பிக்கை.

நவதிருப்பதி கோவில்கள்[தொகு]

 1. வைகுண்டநாதர் கோவில், ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீவைகுண்டம் - சூரியன்
 2. திருவரகுணமங்கை (நத்தம்) - சந்திரன்
 3. திருக்கோளுர் - செவ்வாய்
 4. திருப்புளியங்குடி - புதன்
 5. ஆழ்வார்திருநகரி - குரு
 6. தென்திருப்பேரை - சுக்ரன்
 7. பெருங்குளம் - சனி
 8. இரட்டைத் திருப்பதி
  (திருத்துலைவில்லி மங்கலம்)
  ஸ்ரீ நிவாசன் திருக்கோயில் - ராகு
 9. இரட்டைத் திருப்பதி
  திருத்துலைவில்லி மங்கலம்
  அரவிந்தலோசனர் திருக்கோயில் - கேது

நவதிருப்பதி கோயில்கள் செல்லும் வழி[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவதிருப்பதி&oldid=1731009" இருந்து மீள்விக்கப்பட்டது