புதூர் (விளாத்திகுளம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. புதூர் (ஆங்கிலம்:V. Pudur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

மாவட்டத் தலைமையிடமான தூத்துக்குடியிலிருந்து 75 கிமீ தொலைவில் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம், 40 கிமீ தொலைவில் உள்ள கோவில்பட்டி ஆகும்.

அருகமைந்த ஊர்கள்[தொகு]

புதூருக்கு கிழக்கே கமுதி 40 கிமீ; மேற்கே சாத்தூர் 30 கிமீ; வடக்கே அருப்புக்கோட்டை 21 கிமீ; தெற்கே விளாத்திகுளம் 20 கிமீ.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

23.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 84 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2369 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 8891 ஆகும்[2][3]

ஆதாரங்கள்[தொகு]

  1. "வி.புதூர் பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-25. பார்க்கப்பட்ட நாள் 2019-03-16.
  2. "வி. புதூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்". Archived from the original on 2020-11-25. பார்க்கப்பட்ட நாள் 2019-03-16.
  3. V. Pudur Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=புதூர்_(விளாத்திகுளம்)&oldid=3406681" இலிருந்து மீள்விக்கப்பட்டது