தூத்துக்குடி மாநகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூத்துக்குடி மாநகராட்சி
வகை
வகை
வரலாறு
தோற்றுவிப்பு05 ஆகஸ்டு 2008
தலைமை
மேயர்
என். பி. ஜெகன், திமுக
4 மார்ச் 2022 முதல்
துணை மேயர்
ஜெனிட்டா செல்வராஜ், திமுக
4 மார்ச் 2022 முதல்
மாநகராட்சி ஆணையாளர்
தினேஷ் குமார், இ.ஆ.ப
கட்டமைப்பு
உறுப்பினர்கள்60
அரசியல் குழுக்கள்
ஆளும் கட்சி (52)

|முஸ்லிம் லீக்]] (1) எதிர்கட்சிகள் (6)

மற்றவர்கள் (2)

தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
19 பெப்பிரவரி 2022
அடுத்த தேர்தல்
2027
குறிக்கோளுரை
வையகம் வாழ வாழ்வோம்
கூடும் இடம்
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம், 113, தமிழ் சாலை, தூத்துக்குடி - 628002.
வலைத்தளம்
thoothukudicorporation.com

தூத்துக்குடி மாநகராட்சி இந்தியாவின் மாநிலமான தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான தூத்துக்குடியை நிர்வகிக்கும் அமைப்பகும். இது மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள மாநகராட்சியாகும். தூத்துக்குடி ஒரு துறைமுக நகரமாகும். தூத்துக்குடி மாநகராட்சி, தூத்துக்குடி அத்திமரப்பட்டி, குமரகிரி, மாப்பிள்ளை ஊரணி, மீளவிட்டான், முத்தையாபுரம் மற்றும் சங்கரப்பேரி ஆகிய பகுதிகளைக் கொண்டது. இந்த மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் ஆகும். தூத்துக்குடி சிறப்புநிலை நகராட்சியாக இருந்த இதை, 05 ஆகஸ்டு 2008 அன்று மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இம்மாநகராட்சி 60 வார்டுகள் கொண்டது.

தூத்துக்குடி மாநகராட்சி தமிழகத்தின் சிறப்புமிக்க மாநகராட்சியாகவும், மக்கள் தொகையின் அடிப்படையில் ஆறாவது படி நிலையில் உள்ள மாநகராட்சியாகும். இங்குள்ள மூன்று முக்கியச் சாலைகள் மதுரையும், திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலியை இணைக்கின்றது.

பரப்பளவு
13.47 ச. கிமீ
மக்கள் தொகை
2011 கணக்கெடுப்பின்படி 4,11,628

மாநகராட்சி அலுவலகம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து 8 கிமீ தொலைவில் மேற்கு கிரேட் காட்டன் சாலையில் அமைந்துள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி[தொகு]

தற்பொழுதய தூத்துக்குடி மாநகராட்சி செயலாட்சியர்கள் மற்றும் உறுப்பினர்கள்
ஆணையர் மேயர் துணை மேயர் மாநகராட்சி உறுப்பினர்கள்
திரு. மதுபாலன், இ.ஆ.ப என். பி. ஜெகன் ஜெனிட்டா செல்வராஜ் 60

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 13.47 சகிமீ பரப்பும், 51 மாமன்ற உறுப்பினர்களையும் கொண்ட தூத்துக்குடி மாநகராட்சியின் மொத்த மக்கள்தொகை 4,11,628 ஆகும். அதில் 2,05,958 ஆண்களும், 2,05,670 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 91.57 % மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 999 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 970 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.மக்கள்தொகையில் இந்துக்கள் 64.97 %, இசுலாமியர்கள் 4.74 %, கிறித்தவர்கள் 30.14 % மற்றும் பிறர் 0.15% ஆகவுள்ளனர்.[1]

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022[தொகு]

2022-ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாநகராட்சியின் 60 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 50 வார்டுகளையும், அதிமுக 6 வார்டுகளையும், சுயேச்சைகள் 4 வார்டுகளையும் கைப்பற்றினர். மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல்களில் திமுகவின் என். பி. ஜெகன் மற்றும் ஜெனிட்டா செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டனர்.[2]

தூத்துக்குடி மாநகராட்சி மேயர்கள்[தொகு]

எண் பெயர் அரசியல் கட்சி பதவிக்காலம்
பதவி ஏற்றாள் பதவியை விட்டு வெளியேறள் பதவிக்காலம்
1 கஸ்தூரி தங்கம் திமுக 5 ஆகத்து 2008 24 அக்டோபர் 2011 3 ஆண்டுகள், 80 நாட்கள்
2 சசிகலா புஷ்பா அதிமுக 25 அக்டோபர் 2011 23 சனவரி 2014 2 ஆண்டுகள், 90 நாட்கள்
3 அந்தோணி கிரேஸ் அதிமுக 24 செப்டெம்பர் 2014 24 அக்டோபர் 2016 2 ஆண்டுகள், 30 நாட்கள்
4 என்.பி.ஜெகன் திமுக 4 மார்ச்சு 2022 பதவியில் உள்ளவர் 2 ஆண்டுகள், 45 நாட்கள்

மேற்கோள்கள்[தொகு]

  1. தூத்துக்குடி மாநகராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  2. தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் 2022

வெளி இணைப்புக்கள்[தொகு]