சசிகலா புஷ்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சசிகலா புஷ்பா
பாசக தமிழக துணைத் தலைவர்
தனிநபர் தகவல்
பிறப்பு 22 மே 1976 (1976-05-22) (அகவை 47)
தூத்துக்குடி
வாழ்க்கை துணைவர்(கள்) லிங்கேசுவரா திலகன் (2018ல் மணமுறிவு)[1]

ராமசாமி (2018-2022)

சசிகலா புஷ்பா தமிழக பாஜக துணைத் தலைவரும்,முன்னாள் இந்திய மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார்.[2] இவர் தூத்துக்குடி மாநகராட்சி மன்றத் தலைவராக 2011 முதல் 2014 வரை இருந்துள்ளார்.

திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா என்பவரை அடித்ததற்காக அஇஅதிமுகவில் இருந்து ஆகத்து 1,2016 அன்று நீக்கப்பட்டார். இவரை செயலலிதா அடித்ததாகவும், தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் மாநிலங்களவையில் முறையிட்டார்.[3][4][5]

மறுமணம்[தொகு]

இவரது முன்னால் கணவரான லிங்கேசுவரா திலகனிடம் சட்ட ரீதியாக 2018ஆம் ஆண்டு மணமுறிவுப் பெற்றுக்கொண்டார். பின்பு ராமசாமி என்பவரை திருமணம் செய்யப்போவதாக ஊடக வாயிலாகத் தகவல்கள் பரவியது. இதற்கு எதிராக ராமசாமியின் மனைவியான சத்யபிரியா என்பவர் மதுரை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தனக்கும் ராமசாமிக்கும் 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது, அவருக்கும் எனக்கும் 2016ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவர், என்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். தற்போது, எனக்குத் தெரியாமல் இன்னொரு திருமணம் செய்து கொள்ளவுள்ளார், அதைத் தடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராமசாமி மறுமணம் செய்ய விரும்பினால் சட்ட ரீதியாக அவரது மனைவியான சத்யாபிரியாவை மணமுறிவுப் பெற்றுக்கொண்டு திருமணம் செய்யலாம் என்றும் இந்த திருமணத்திற்கு தடைவிதித்தது. எனினும் நீதிமன்ற தடையைமீறி மார்ச்சு 26, 2018ஆம் ஆண்டு சசிகலா புஷ்பா-ராமசாமிக்கும் தில்லியில் திருமணம் நடைபெற்றது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கணவருடன் விவாகரத்து சசிகலா புஷ்பாவுக்கு மறுமணம்??". http://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/divorce-husband-sasikala-pushpa-ready-next-marriage.  நக்கீரன்.
  2. "Members Page". http://164.100.47.5/newmembers/Website/Main.aspx. 
  3. "AIADMK sacks Sasikala Pushpa after she alleges ‘threat to life’ in Rajya Sabha - Times of India". http://timesofindia.indiatimes.com/india/AIADMK-sacks-Sasikala-Pushpa-after-she-alleges-threat-to-life-in-Rajya-Sabha/articleshow/53487137.cms. 
  4. "AIADMK expels Sasikala Pushpa" (in en-IN). The Hindu. 2016-08-01. http://www.thehindu.com/news/national/tamil-nadu/aiadmk-expels-sasikala-pushpa/article8927617.ece. 
  5. "சசிகலா புஷ்பாவிற்காக ரத்தம் சொட்ட அடிவாங்கிய லிங்கேஸ்வர திலகன் - பிளாஷ்பேக்". https://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-pushpa-ex-husband-lingeswaran-flashback-314790.html.  (20 மார்ச்சு 2018). ஒன் இந்தியா தமிழ்
  6. "நீதிமன்றத் தடையை மீறி சசிகலா புஷ்பா - ராமசாமி திருமணம்! - டெல்லியில் கோலாகலம்". https://www.vikatan.com/news/india/120239-sasikala-pushpa-ramasamy-got-married.html.  விகடன் (26 மார்ச்சு 2018)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சசிகலா_புஷ்பா&oldid=3552655" இருந்து மீள்விக்கப்பட்டது