திருச்சி சிவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருச்சி என். சிவா
நாடாளுமன்ற உறுப்பினர்
தனிநபர் தகவல்
பிறப்பு மே 15, 1954 (1954-05-15) (அகவை 66)
திருச்சி, தமிழ்நாடு
அரசியல் கட்சி தி.மு.க
வாழ்க்கை துணைவர்(கள்) தெய்வசிகாமணி
பிள்ளைகள் ஒரு மகள் மற்றும் மகன்
இருப்பிடம் திருச்சி
கல்வி முதுகலைமானி ஆங்கிலம், இளங்கலைமானி சட்டம்
இணையம் நாடாளுமன்ற உறுப்பினர் தன்விவரக் குறிப்பு இணையம்

திருச்சி சிவா [1] (Tiruchi Siva) (பிறப்பு: 6 சூன், 1954) இந்தியாவின் நாடாளுமன்ற மாநிலங்களவை (மேலவை) உறுப்பினரும், திமுக வின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான திருச்சி நடேசன் சிவா (அ) திருச்சி என். சிவா[1], தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் பிறந்தவராவார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரான இவர் சிறந்த எழுத்தாளரும், இலக்கியவாதியுமாவார்.

ஒருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றி வருகிறார்.

இலங்கைவாழ்த் தமிழர்களுக்காக நாடாளுமன்றத்தில் அதிகமாகக் குரல் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர்.[சான்று தேவை] நூல்கள் பலவற்றையும், அவரின் கட்சிப் பத்திரிகையான முரசொலியில் பல சமுதாய, விழிப்புணர்வு மற்றும் அரசியல் தொடர் கட்டுரைகளையும் எழுதியவர்[1]. அவர் எழுதிய நூல்களில் தலைநகரில் தமிழன் குரல் என்ற நூல் புகழ்பெற்ற நூலாகும், மேலும் குற்றவாளிக் கூண்டில் சாக்ரடீஸ் என்ற நூலையும் எழுதியுள்ளார். மாணவப் பருவத்திலேயே திமுக மாணவரணியில் சேர்ந்து கட்சித் தொண்டாற்றியவர். 1976 நெருக்கடி நிலையின் போது மிசாக் கைதியாகச் சிறை சென்றவர்[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 திருச்சி சிவா மாநிலங்களவை உறுப்பினர் தன்விவரக் குறிப்பு இணையம் பார்த்து பராணிடப்பட்ட நாள் 12-06-2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்சி_சிவா&oldid=3068558" இருந்து மீள்விக்கப்பட்டது