உள்ளடக்கத்துக்குச் செல்

சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி

ஆள்கூறுகள்: 10°49′53″N 78°41′36″E / 10.83139°N 78.69333°E / 10.83139; 78.69333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்திரம் பேருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்சிந்தாமணி, திருச்சிராப்பள்ளி
தமிழ்நாடு. அஞ்சல் குறியீட்டு எண் 620 002.
இந்தியா
ஆள்கூறுகள்10°49′53″N 78°41′36″E / 10.83139°N 78.69333°E / 10.83139; 78.69333
உரிமம்திருச்சிராப்பள்ளி மாநகராட்சி
இயக்குபவர்தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை
நடைமேடை6
கட்டமைப்பு
தரிப்பிடம்உள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
வரலாறு
திறக்கப்பட்டது1979 (1979)[1]
பயணிகள்
பயணிகள் 201050,000 தினந்தோறும்[2]

சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி (மெயின் கார்டு கேட் பேருந்து நிலையம்) என்பது திருச்சிராப்பள்ளியில் உள்ள பேருந்து நிலையங்களில் ஒன்று. மற்றொன்று மத்திய பேருந்து நிலையம்.[3] சத்திரம் பேருந்து நிலையம் புனித சூசையப்பர் கல்லூரிக்கு அருகில் சிந்தாமணியில் அமைந்துள்ளது.

கண்ணோட்டம்

[தொகு]

1979 முதல் செயல்பட்டு வரும்[4] இந்த பேருந்து நிலையம் அருகிலுள்ள சின்னையா பிள்ளை சத்திரம் என்பதிலிருந்து இதன் பெயரை பெற்றது. [2] இந்த பேருந்து நிலையத்தை நிர்வகிக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளையும் சிற்றுந்துகளையும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் வடக்கு, கிழக்கு, மற்றும் மேற்கு பகுதிகளுக்கு இயக்குகிறது.[5][6][7]

சேவைகள்

[தொகு]
நடைமேடை செல்லும் இடம்
1 அரியமங்கலம், காட்டூர், திருவெறும்பூர், பாய்லர், துவாக்குடி, HAPP, நவல்பட்டு மற்றும் பூதலூர்
2 கீரனூர் மார்க்கமாக செல்லும் உள்ளூர் பேருந்துகள், விராலிமலை மார்க்கமாக செல்லும் உள்ளூர் பேருந்துகள், திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம், திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம், உறையூர் மற்றும் பொன்மலை
3 சங்கிலியாண்டபுரம், செந்தண்ணீர்புரம், கே. கே. நகர் மற்றும் வயலூர்
4 சமயபுரம் மற்றும் மண்ணச்சநல்லூர்
5 முக்கொம்பு, பெட்டவாய்த்தலை, குளித்தலை மற்றும் கல்லணை, பூண்டி மாதா பேராலயம்
6 இலால்குடி
இலால்குடி தடத்துக்குள் நுழையும் பேருந்துகள்.

இணைப்பு

[தொகு]

சத்திரம் பேருந்து நிலையம் தென்மேற்கில் 1.3 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி கோட்டை ரயில் நிலையத்துடனும், தென்கிழக்கில் 1.4 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி டவுன் ரயில் நிலையத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களில்

[தொகு]

2013 ஆம் ஆண்டு வெளிவந்த சத்திரம் பேருந்து நிலையம் என்ற தமிழ்த்திரைப்படத்தில் இப்பேருந்து நிலையம் காட்சிப்படுத்தப்பட்டது.[8][9]

மேலும் பார்க்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. ச.கணேசன் (20 ஆகஸ்ட் 2009). "Bus Stand to get roof". தி இந்து (ஆங்கில நாளிதழ்) (திருச்சிராப்பள்ளி). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/bus-stand-to-get-roof/article209220.ece. பார்த்த நாள்: 28 ஜனவரி 2014. 
  2. 2.0 2.1 "Plea to rename Chathram Bus Stand after Kamarajar". தி இந்து (ஆங்கில நாளிதழ்) (திருச்சிராப்பள்ளி). 12 நவம்பர் 2010. http://www.hindu.com/CPC/11/12/stories/2010111262180300.htm. பார்த்த நாள்: 28 ஜனவரி 2014. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. R. கோகுல் (12 ஜூலை 2013). "Chatram Bus Stand vendors up in arms against midnight closure of shops". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (ஆங்கில நாளிதழ்) (திருச்சிராப்பள்ளி) இம் மூலத்தில் இருந்து 2013-10-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131004222557/http://articles.timesofindia.indiatimes.com/2013-07-12/madurai/40535690_1_bus-stand-shops-mofussil-buses. பார்த்த நாள்: 28 ஜனவரி 2014. 
  4. 4.0 4.1 ச.கணேசன் (11 ஜூன் 2012). "Commuters face the heat without bus shelters". தி இந்து (ஆங்கில நாளிதழ்) (திருச்சிராப்பள்ளி). http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/article3514306.ece. பார்த்த நாள்: 28 ஜனவரி 2014. 
  5. "Six exclusive bus services for women introduced in the city". தி இந்து (ஆங்கில நாளிதழ்). 21 ஆகஸ்ட் 2006. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/six-exclusive-bus-services-for-women-introduced-in-the-city/article3093707.ece. பார்த்த நாள்: 7 பெப்ரவரி 2014. 
  6. "New bus services". தி இந்து (ஆங்கில நாளிதழ்). 9 ஜூன் 2007. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/around-the-city/article1854101.ece. பார்த்த நாள்: 7 பெப்ரவரி 2014. 
  7. "New buses on roads". தி இந்து (ஆங்கில நாளிதழ்) (திருச்சிராப்பள்ளி). 6 ஜனவரி 2008. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/new-buses-on-roads/article1173513.ece. பார்த்த நாள்: 28 ஜனவரி 2014. 
  8. S. R. அசோக் குமார் (17 நவம்பர் 2012). "Music for the masses". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/music-for-the-masses/article4105489.ece. பார்த்த நாள்: 28 ஜனவரி 2014. 
  9. "சத்திரம் பேருந்து நிலையம் (திரை விமர்சனம்) [சத்திரம் பேருந்து நிலையம் (திரை விமர்சனம்)]" (in Tamil). மாலை மலர். 12 ஜூலை 2013 இம் மூலத்தில் இருந்து 2014-02-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140201215352/http://www.maalaimalar.com/2013/07/12091259/Sathiram-Perunthu-Nilayam-movi.html. பார்த்த நாள்: 28 ஜனவரி 2014. 

இணைப்புகள்

[தொகு]