உள்ளடக்கத்துக்குச் செல்

கூத்தப்பார்

ஆள்கூறுகள்: 10°47′49″N 78°47′31″E / 10.796970°N 78.791993°E / 10.796970; 78.791993
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூத்தப்பார்
கூத்தப்பார்
அமைவிடம்: கூத்தப்பார், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°47′49″N 78°47′31″E / 10.796970°N 78.791993°E / 10.796970; 78.791993
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
வட்டம் திருவெறும்பூர்

தலைவர் பதவிப்பெயர் =

ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

15,943 (2011)

2,491/km2 (6,452/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 6.4 சதுர கிலோமீட்டர்கள் (2.5 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/koothappar

கூத்தப்பார் (ஆங்கிலம்:Koothappar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

இங்கு ஜல்லிக்கட்டு நடைபெறும், இந்த ஊரில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட மிக பழமையான சிவாலயம் உள்ளது. சிவனை மருந்தீஸ்வரர் என்றும் பார்வதியை ஆனந்தவல்லி என்றும் வழிபாடுகின்றனர். ஊர் தெய்வமாக ஆனி கால் சித்தர் முனியாண்டவர் அருள்கிறார். ஊரில் விவசாயம் மூலத்தொழிலாக உள்ளது. விவசாய நீர்நிலைகளாக சிவந்தான்குளம், பெரியகுளம், சம்பங்குளம், சம்புதிகுளம் போன்ற ஏரிகள் உள்ளன. உலகிலேயே மிக உயரமான ஸ்ரீ மஹா காலேஸ்வரர் 59 ¼ அடி உயரத்திலும்,ஸ்ரீ காளீஸ்வரி 54 ¼ அடி விஸ்வரூப தரிசனம் தருகிறார்கள். 2000 ம் ஆண்டு கதிர் பெரியசாமி காரகாச்சியார் என்பவர் இந்த கோவிலைகட்டியுள்ளார்.[4]

அமைவிடம்

[தொகு]

திருச்சி - தஞ்சாவூர் சாலையில் அமைந்த கூத்தப்பார் பேரூராட்சி, திருச்சியிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம், திருவெறும்பூர் ஆகும்.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

6.4 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 63 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருவெறும்பூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4250 வீடுகளும், 15943 மக்கள்தொகையும் கொண்டது.[6][7][8]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. உலகிலேயே மிக உயரமான இந்த காளீஸ்வரி கோயில் எங்க இருக்கு தெரியுமா?.
  5. கூத்தப்பர் பேரூராட்சியின் இணையதளம்
  6. கூத்தப்பர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  7. Koothappar Population Census 2011
  8. கூத்தப்பார் பேரூராட்சி
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூத்தப்பார்&oldid=4156911" இலிருந்து மீள்விக்கப்பட்டது