செங்கோட்டை (நகரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செங்கோட்டை
செங்கோட்டை
இருப்பிடம்: செங்கோட்டை
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°58′N 77°16′E / 8.97°N 77.27°E / 8.97; 77.27ஆள்கூற்று: 8°58′N 77°16′E / 8.97°N 77.27°E / 8.97; 77.27
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எம். கருணாகரன் இ. ஆ. ப. [3]
நகர்மன்ற தலைவர் Vacant
மக்கள் தொகை 26 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


181 metres (594 ft)


தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆகும். 2.68 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் 26,823 மக்கள் தொகை பெருக்கத்தை கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் நகரம் ஆகும். கோட்டை போன்ற அமைப்பில் நுழைவு வாயில் இருந்தால் இப்பெயர் பெற்றது. 1956 வரை கேரள மாநில அரசின் கீழ் இப்பகுதி இருந்தது. இங்கு வாழும் மக்களின் தாய்மொழி தமிழ். மேலும் கேரள அரசால் இப்பகுதியின் வளர்ச்சி தடுக்கப்பட்டது. இதைக் கண்டித்து நாகர்கோவிலைச் சேர்ந்த மார்ஷல் நேசமணி, கஞ்சன், சிதம்பரம் பிள்ளை ஆகியோருடன் சேர்ந்து செங்கோட்டை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின் தமிழக முதல்வர் காமராஜர் முயற்சியால் இப்பகுதி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இந்த தாலுகாவின் கீழ் தென்காசி ஒரு காலத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 26,823 மக்கள் இங்கு வாழ்கின்றார்கள்.[4] இவர்களில் 49.9% ஆண்கள், 50.1% பெண்கள் ஆவார்கள். செங்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 84.3% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 82.1%, பெண்களின் கல்வியறிவு 68.36% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. செங்கோட்டை மக்கள் தொகையில் 10.49% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கோட்டை_(நகரம்)&oldid=2482140" இருந்து மீள்விக்கப்பட்டது