மேலகரம்
தோற்றம்
| மேலகரம் | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| வட்டம் | தென்காசி |
| ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை | 12,860 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| இணையதளம் | www.townpanchayat.in/melagaram |
மேலகரம் (ஆங்கிலம்:Melagaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம், தென்காசி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[3]
அமைவிடம்
[தொகு]மேலகரம் பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடமான தென்காசியிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், குற்றாலத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலும், இலஞ்சியிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், ஆயிரப்பேரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]6.56 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 90 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேலகரம் பேரூராட்சி 5,884 வீடுகளும், 14,535 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]
புகழ்பெற்றவர்கள்
[தொகு]- திருக்குற்றாலக் குறவஞ்சி எழுதிய திரிகூடராசப்பக் கவிராயர்
- திருவாடுதுறை ஆதின அதிபர் - சுப்பிரமணிய தேசிகர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu. பார்த்த நாள்: 8 August 2025.
- ↑ மேலகரம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ மேலகரம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Melagaram Population Census 2011