கடையநல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கடையநல்லூர்
—  முதல் நிலை நகராட்சி  —
கடையநல்லூர்
இருப்பிடம்: கடையநல்லூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°4′51″N 77°20′51″E / 9.08083°N 77.34750°E / 9.08083; 77.34750ஆள்கூறுகள்: 9°4′51″N 77°20′51″E / 9.08083°N 77.34750°E / 9.08083; 77.34750
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர்
நகர்மன்ற தலைவர் ஜைபுன்னிஷா
சட்டமன்றத் தொகுதி கடையநல்லூர்
சட்டமன்ற உறுப்பினர்

பி. செந்தூர்பாண்டியன் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

75,604 (2001)

1,139/km2 (2,950/sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

கடையநல்லூர் (ஆங்கிலம்:Kadayanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். முதன்மை உற்பத்திப் பொருட்கள் கைத்தறி ஆடைகள், தீப்பெட்டி, தானியங்கள், மட்பாண்டங்கள் ஆகும். 2011 கணக்கெடுப்பின் படி நகரின் மக்கள்தொகை 57,277

இங்கு உள்ள "கடைகாலீஸ்வரர்" கோயிலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இந்நகர் மலைகளின் அடிவாரத்தில் குற்றாலம் அருவி மற்றும் தென்காசிக்கு அருகில் உள்ளது. மே முதல் ஆகஸ்ட் வரை சாரலுக்கு மற்றும் நெல் வயல்களுக்கு பெயர் பெற்றது.


 • பிரபலமானவர்கள்*

பிரபல ஓவியர்கள் திரு.ச.கொண்டல்ராஜ் மற்றும் முத்துவாப்பா, ஜெயராம், பிறந்த ஊர்.

பெயர்க் காரணமாக அறியப்படுவது[தொகு]

கலியுகத்திலே தனது பக்தர்களுக்கு அருள்புரிய கருதிய காலகேதார நாதர் ஒரு திருவிளையாடல் மூலமாக உலகிற்கு வெளிப்பட்டார். தெற்கு நோக்கி தீர்த்த யாத்திரை செய்து வந்த சிவனடியார் ஒருவர் இப்புண்ணிய ஸ்தலத்திற்கு அருகே வரும்போது தாக மிகுதியால் இப்பகுதி இடையர்களிடம் தண்ணீர் வேண்ட அவர்கள் மூங்கில் பாத்திரமாகிய கடைகாலில் பால் கொடுத்து கனியோடு உபசரித்தனர். அவர்கள் சென்றபிறகு தான் குடித்த கடைகாலை மண்மூடியிருந்த சுயம்புலிங்க மூர்த்தியான காலகேதார நாதர் மேலாக கவிழ்த்து வைத்து சென்றுவிட்டார் முனிவர். மீண்டும் இவ்விடத்திற்கு வந்த இடையர்கள் கடைகாலை எடுக்க முயன்று முடியாமல் போக கோடாரியால் வெட்ட ரத்தம் கசிந்தது. பயந்து போன இடையர்கள் இப்பகுதி மன்னனான ஜெயத்சேனபாண்டியனிடம் முறையிட்டார்கள். மன்னனும் இவ்விடத்திற்கு வந்து தான் பார்வை குறைபாடு உள்ளவன் ஆதலால் தன் கைகளால் கடைகாலை தொட்டு பார்த்தபோது அவனுக்கு கண்ணொளி பிறந்தது. இது ஈசன் அருளே என்று எண்ணி கண்கொடுத்த கமலநாதா, கடைகாலீஸ்வரா என சிவபெருமானை மனமுருக வேண்டினான் மன்னன். அப்போது நிலத்தடியில் இருந்த காலகேதார நாதர் கடைகாலீஸ்வரராக வெளிப்பட்டார். ஆலய நிர்மாணம் செய்யும்படி அசரீரி வாக்கு எழுந்தது. அதன்படி ஆலயம் செய்து அதனை சுற்றி நகர நிர்மாணமும் செய்தார் மன்னர். அந்நகரமான கடைகாநல்லூர் தற்போது மருவி கடையநல்லூர் என வழங்கப்பட்டு வருகிறது.

புவியியல்[தொகு]

கடையநல்லூர் 9°05′N 77°21′E / 9.08°N 77.35°E / 9.08; 77.35 அமைந்துள்ளது.[3] கடல் மட்டத்திலிருந்து சராசரி உயரம் 191 m (627 ft). நகரின் மொத்தப் பரப்பு 52.25 skm. மழைக்காலம் தவிர, பொதுவாக வறண்ட வானிலை நிலவுகிறது.

=கடையநல்லூர் தனி தாலுகா*

புள்ளி விவரங்கள்=[தொகு]

திருமலைகோவில் 16km

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 57,277 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 988 பெண்கள். தேசிய சராசரியான 929-ஐ விட அதிகம். கடையநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 71.8% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99% விட குறைவு.[4]

கல்விக்கூடங்கள்[தொகு]

 • மசூது தைக்கா உயர் நிலைப்பள்ளி,மெயின் ரோடு.
 • தாருஸ்ஸலாம் உயர் நிலைப்பள்ளி,மெயின் பஜார்.
 • ஹிதாயதுல் இஸ்லாம் உயர் நிலைப்பள்ளி,மெயின் பஜார்.
 • அரசினர் ஆண்கள் மேனிலைப்பள்ளி, கிருஷ்ணாபுரம்.
 • அரசினர் பெண்கள் உயர் நிலைப்பள்ளி,மெயின் ரோடு.
 • ரத்னா உயர் நிலைப்பள்ளி, முத்து கிருஷ்ணாபுரம்.
 • உலகா மேனிலைப்பள்ளி, முத்து கிருஷ்ணாபுரம்.
 • பாத்திமா மருந்தியல் கல்லூரி மெயின் ரோடு.

முதலியன குறிப்பிடத்தக்கன.


முக்கிய ஆலயங்கள்[தொகு]

 • 24 மனை தெலுங்கு செட்டியார் களுக்கு பாத்தியபட்ட ஸ்ரீ காமாஷ்சியம்மன் திருகோவில் மேலக்கடையல்லூர்
 • கடைகாலீஸ்வரர் திருக்கோயில், மேலக்கடையநல்லூர்.
 • கரியமாணிக்கப்பெருமாள் கோயில்(நீலமணி நாதர் கோயில்), மேலக்கடையநல்லூர்.
 • அண்ணாமலைநாதர் கோயில், மேலக்கடையநல்லூர்.
 • முப்புடாதியம்மன் கோயில், மார்க்கெட்.
 • பத்திரகாளியம்மன் கோயில், மாவடிக்கால்.
 • அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோயில், கிருஷ்ணாபுரம்.
 • முத்தாரம்மன் கோயில், முத்து கிருஷ்ணாபுரம்.
 • முப்புடாதியம்மன் கோயில், கிருஷ்ணாபுரம்.
 • அருள்மிகு பாமா ருக்மணி கிருஷ்ணசுவாமி திருக்கோவில், கிருஷ்ணபுரம்
 • அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோவில், கிருஷ்ணபுரம்
 • வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில், மேலக்கடையநல்லூர்.
 • தாமரைக்குளம் சுடலை மாடசாமி கோயில், மேலக்கடையநல்லூர்.
 • மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல்
 • தமிழ் நாடு தவ்ஹீத் பள்ளிவாசல்
 • இக்பால் நகர் புதுப்பள்ளி
 • ஜாமிவுல் அன்வர் பள்ளிவாசல்
 • தாருல் உலூம் அரபி பள்ளிவாசல் (மதரசா)
 • மகதூம் ஞானியார் பெரிய பள்ளிவாசல், மெயின் ரோடு.
 • சிந்தா மதார் தைக்கா, ரெயில்வே பீடர் ரோடு.
 • நத்தர்ஷா தைக்கா
 • திராப்ஷா தைக்கா
 • தங்கள் கட்சி கலிபா சாஹிப் தைக்கா - மசூது தைக்கா மேல்நிலைப்பள்ளி
 • பெத்தேல் ஏ.ஜி வேதக்கோவில், மேலக்கடையநல்லூர்.

ஆதாரங்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. Falling Rain Genomics, Inc - Kadaiyanallur
 4. 4.0 4.1 "Census Info 2011 Final population totals". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India (2013). பார்த்த நாள் 26 January 2014.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கடையநல்லூர்&oldid=1971793" இருந்து மீள்விக்கப்பட்டது