வாசுதேவநல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாசுதேவநல்லூர் (ஆங்கிலம்:Vasudevanallur),நகரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம்(திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 18/07/2019 அன்று பிரிக்கப்பட்டது), சிவகிரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இங்குள்ளது.

Vasudevanallur

vasu city

panchayat town
Vasudevanallur

Location in Tamil Nadu, India

Coordinates: 9.23°N 77.42°E
Country India
State Tamil Nadu
District tenkasi
Named for nature city
Area rank 1
Elevation 178 m (584 ft)
Population

(2011)

• Total 21,361
Languages
• Official Tamil
Time zone UTC+5:30 (IST)
Pincode 627758
Vehicle registration TN 79

அமைவிடம்[தொகு]

இது மதுரை - தென்காசி நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து சுமார் 115 கி.மீ. தொலைவிிலும், தென்காசியிருந்து 37 கி.மீ தொலைவிலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. மேலும் இது திருநெல்வேலியிருந்து 85 கிமீ தொலைவிலும்; சங்கரன்கோவிலிருந்து 20 கிமீ தொலைவிலும்; இராஜபாளையத்திலிருந்து 30 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

10.40 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 93 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5833 வீடுகளும், 21361 மக்கள்தொகையும் கொண்டது.[2] [3][4]

பொருளாதாரம்[தொகு]

வாசுதேவநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கரும்பு நன்கு விளைவதால், வாசுதேவநல்லூரில் தனியார்துறையில் தரணி சர்க்கரை ஆலை இயங்குகிறது.[5]

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 9°14′N 77°25′E / 9.23°N 77.42°E / 9.23; 77.42 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 178 மீட்டர் (583 அடி) உயரத்தில் இருக்கின்றது.

போக்குவரத்து[தொகு]

மதுரை - செங்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால், மதுரை, தென்காசி, இராஜபாளயம், சங்கரன்கோவில், செங்கோட்டைக்கு பேருந்துகள் உள்ளன.

முக்கிய இடங்கள்[தொகு]

அருள்மிகு சிந்தாமணிநாத சுவாமி திருக்கோவில் (தமிழ்நாட்டிலேயே மூலவராக "அர்த்தநாரீஸ்வரர்" உள்ள இரண்டாவது தலம் - சிவனும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் கோயில்கள் திருச்செங்கோடு மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய இடங்களில் உள்ளன).

அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோவில்-சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது

அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்-இக்கோவிலில் பூக்குழி திருவிழா ஒவ்வொரு சித்திரை மாதமும் மூன்றாவது செவ்வாய் கிழமை கொண்டாடப்படும், இப்பூக்குழி திருவிழாவில் முதலில் பசு மாடு "பூ" இறங்கிய பின் தான் பக்தர்கள் பூ இறங்குவது வழக்கம். இவ்வாறு பசு மாடு தீ மிதிப்பதை விசேஷமாக கருதப்படுகிறது.

இதன் அருகில்தான் சுதந்திர போராட்டத்திற்கு முதல் முழக்கமிட்ட "பூலித்தேவன்" ஆண்ட நெல்கட்டும் செவல் உள்ளது. 1998ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக முதல்வரால் மாண்புமிகு மு.கருணாநிதி அவர்களால் பூலித்தேவன் அரண்மனை பழமைமாறாமல் புதிப்பிக்கப்பட்டு சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[7]

பூலித்தேவரும் கான்சாகிப் என்ற மருதநாயகமும் போரிட்ட பகுதி இன்றைய வாசுதேவநல்லூர் பேருந்து நிலையத்தை ஒட்டிய மந்தை பகுதியாகும்.

இந்நகரின் அருகில் சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள "தலையணை" எனப்படும் பகுதி ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். வனமும் அருவியும் ஆறும் தலையணையை சிறப்பூட்டுகின்றன. வருடத்தின் அனைத்து நாட்களிலும் நீரோட்டம் உள்ள தலையணைக்கு அருகிலுள்ள ஊர்களிலிருந்து சுற்றுலாவாக மக்கள் வருகின்றனர். இப்பகுதியில் "மலைவாழ் மக்கள் குடியிருப்பு' உள்ளது. வாசுதேவநல்லூர் பேரூராட்சி மூலமாக மலை வாழ் மக்களுக்காக 19 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.

சிறப்பு[தொகு]

  • நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர்.
  • திரைப்பட படத்தொகுப்பாளர் மற்றும் ஆவணப்பட இயக்குனர் எடிட்டர் அலாவுதீன் இந்த ஊரை சார்ந்தவர்

ஆதாரங்கள்[தொகு]

  1. பேரூராட்சியின் இணையதளம்
  2. பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  3. Vasudevanallur Population Census 2011
  4. Vasudevanallur Town Panchayat
  5. Dharani - Vasudevanallur Sugar Refining Mill
  6. "Vasudevanallur". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  7. http://www.tn.gov.in/tamiltngov/memorial/pooli.htm

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசுதேவநல்லூர்&oldid=2778302" இருந்து மீள்விக்கப்பட்டது