புளியங்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புளியங்குடி

லெமன் சிட்டி

—  நகரம்  —
புளியங்குடி
இருப்பிடம்: புளியங்குடி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°06′N 77°14′E / 9.10°N 77.23°E / 9.10; 77.23ஆள்கூற்று: 9°06′N 77°14′E / 9.10°N 77.23°E / 9.10; 77.23
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
அருகாமை நகரம் சங்கரன்கோவில்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இ. ஆ. ப. [3]
மக்களவைத் தொகுதி தென்காசி
மக்களவை உறுப்பினர்

Vasanthi M(அஇஅதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

 (2001)

46,034/km2 (119,228/சது மை)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

புளியங்குடி (ஆங்கிலம்:Puliangudi), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

இந்த ஊரானது மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் உள்ள ஊர்களில் ஒன்றாகும். மதுரையிலிருந்து கொல்லம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், இராஜபாளையத்திலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், சங்கரன்கோவிலில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஊர் அமைந்துள்ளது. சங்கரன்கோவில், கோவில்பட்டி, தென்காசி, கடையநல்லூர் ஆகிய பெருநகரங்கள் இந்த ஊரின் அருகே அமைந்துள்ளன. புளியங்குடி இந்த ஊரில் எலுமிச்சை பழம் மிகவும் சுவையாகவும் இருக்கும் அதனால் இந்த ஊர் லெமன் சிட்டி என்றும் கூட அழைக்கப்படுகிறது.[சான்று தேவை]

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 46,034 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். புளியங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புளியங்குடி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

= கல்வி நிலையங்கள்[தொகு]

கல்லூரிகள்[தொகு]

 • எஸ். வி. பொறியியல் கல்லூரி
 • கோமதி அம்மாள் தொழில்நுட்பக் கல்லூரி
 • மனோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி

மேல்நிலைப் பள்ளிகள்[தொகு]

 • ஸ்ரீ கண்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி
 • செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
 • நியூ கிரசென்ட் மெட்ரிக் பள்ளி

மேல்நிலைப் பள்ளிகள்

 • அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
 • அரசு பெண்கள் மனித வளம் மேல்நிலைப் பள்ளி
 • ஹஜ். என். யூ. சி(ஹிந்து நாடார்) மேல்நிலைப் பள்ளி
 • காயிதே மில்லத் மேல்நிலைப் பள்ளி
 • சுயம்புலிங்கம் மேல்நிலைப் பள்ளி
 • சீனி அம்மாள் மேல்நிலைப் பள்ளி
 • கண்ணா பெண்கள் மேல்நிலைப் பள்ளி
 • சேனைத் தலைவர் மேல்நிலைப் பள்ளி

உயர்நிலைப் பள்ளிகள்[தொகு]

 • ஆர். சி உயர்நிலைப் பள்ளி
 • முஹைதீன் ஆண்டவர் உயர்நிலைப் பள்ளி
 • எ. வி. எஸ் உயர்நிலைப் பள்ளி
 • ஹஜ். என். யூ. சி உயர்நிலை பள்ளி

நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள்[தொகு]

 • செல்வன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி
 • அருண் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி
 • அகஸ்த்தியர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி
 • வெல்டன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி
 • அமராவதி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி
 • எஸ். வி. சாய் நிகிதன் (CBSE) நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி

போக்குவரத்து[தொகு]

புளியங்குடியில் இரண்டு முக்கிய பேருந்து நிலையங்கள் உள்ளன - மேற்கே சுந்தரலிங்கம் பேருந்து நிலையம் & மவேரியன் இம்மானுவேல் சேகரன் பேருந்து நிலையம், தென்காசி, இராஜபாளையம், சங்கரன்கோவில், திருநெல்வேலி, மதுரை போன்ற இடங்களுக்கு இப்பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. அருகிலுள்ள இரயில் நிலையங்கள் சங்கரன்கோவில் மற்றும் கோவில்பட்டி ஆகியவையாகும்.

மற்ற நகரங்களுக்கு தொலைவு[தொகு]

புளியங்குடி - சங்கரன்கோவில் = 16 கி.மீ.

புளியங்குடி - கடையநல்லூர் = 11 கி.மீ.

புளியங்குடி - வாசுதேவநல்லூர் = 06 கி.மீ.

புளியங்குடி - தென்காசி = 31 கி.மீ.

புளியங்குடி - திருநெல்வேலி= 52 கி.மீ.

புளியங்குடி - ராஜபாளையம் = 40 கி.மீ.

புளியங்குடி - சிவகிரி = 19 கி.மீ.

புளியங்குடி - மதுரை = 113 கிமீ

புளியங்குடி - திருச்சி = 230 கி.மீ.

புளியங்குடி - சென்னை- 600 கி.மீ.

புளியங்குடி - சுரண்டை = 24 கி.மீ.

வங்கிகள்[தொகு]

 • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
 • தமிழ்நாடு மெக்கன்டைல் பேங்க்
 • சிட்டி யூனியன் பேங்க்
 • இந்தியன் ஓவ்சீஸ் பேங்க்

கோவில்கள்[தொகு]

இந்து கோவில்கள்[தொகு]

 • அருள்மிகு மீனாட்சி சமாத்த சொக்காலிங்க சுவாமி கோயில், சித்தமணி
 • அருள்மிகு பாலா சுப்ரமணிய சுவாமி கோயில், புளியங்குடி.
 • அருள்மிகு மாரியம்மன் கோயில், சித்தமணி.
 • அருள்மிகு தாண்டாயுதாபாணி கோயில்
 • அருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் கோயில்
 • அருள்மிகு உச்சிமஹா காளி அம்மன் கோயில்
 • அருள்மிகு காமாட்சி அம்மன் கோயில், சித்தமணி.
 • அருள்மிகு அவணி அம்மன் கோயில்
 • அருள்மிகு செல்லியம்மன் கோவில்
 • அருள்மிகு முப்பத்து அம்மன் கோயில், சித்தமணி.
 • அருள்மிகு மாரியம்மன் கோயில், சித்தமணி.

பள்ளிவாசல்கள்[தொகு]

 • மீராசா அண்டவர் ஜும்மா மஸ்ஜித் (மேல பள்ளிவாசல்)
 • கீழ (கிழக்கு) பள்ளிவாசல் ஜும்மா மஸ்ஜித்
 • மஸ்ஜித் ஆலம் ஜும்மா பள்ளிவாசல்
 • ஜமாலியா பள்ளிவாசல் ஜின்னா நகர்
 • டி. என். டி. ஜே மஸ்ஜித் ஜின்னா நகர்
 • காய்தேமில்லத் பள்ளி (முன் மஸ்ஜித்)

கிறித்தவ தேவாலயங்கள்[தொகு]

 • ஆர். சி தேவாலயங்கள்
 • செயிண்ட் சேவியர் தேவாலயம் - சித்தமணி
 • சி. எஸ். ஐ. தேவாலயம்
 • புனித மத்தேயு தேவாலயம், புளியங்குடி
 • செயின்ட் பர்த்தோலோம் தேவாலயம், சித்தமணி
 • எஸ். டி. ஏ தேவாலயம்

மருத்துவமனை[தொகு]

 • அரசு மருத்துவமனை

தனியார் மருத்துவமனைகள்[தொகு]

 • ஸ்ரீ கண்ணா மருத்துவமனை
 • மகாலட்சுமி மருத்துவமனை
 • செல்வம் மருத்துவமனை
 • ராஜா மருத்துவமனை
 • தங்கவினாயகம் மருத்துவமனை
 • ஜெயம் மருத்துவமனை
 • ஜனதா மருத்துவமனை

எலுமிச்சை[தொகு]

புளியங்குடி நகரில் எலுமிச்சைக்கான தினசரி சந்தை நடைபெறுகிறது. புளியங்குடி அருகிலுள்ள புன்னையாபுரம் கிராமம் எலுமிச்சை விளைவிப்பதில் சிறந்த இடம் வகிக்கின்றது. இப்பகுதி எலுமிச்சை பழத்தில் சாறு (நீர்ப்பதம்) குறைவதற்கு மற்ற எலுமிச்சைகளைவிட அதிக நாட்களாகும் என்பதே இதன் சிறப்பாகும்.[சான்று தேவை]

குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளியங்குடி&oldid=2582428" இருந்து மீள்விக்கப்பட்டது