திருவேங்கடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருவேங்கடம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் திருவேங்கடம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சி மன்றத் தலைவர் சீனிவாசன்
மக்கள் தொகை

அடர்த்தி

8,337 (2011)

534/km2 (1,383/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 15.60 சதுர கிலோமீட்டர்கள் (6.02 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/thiruvengadam

திருவேங்கடம் (ஆங்கிலம்:Thiruvengadam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். சங்கரன்கோவில் வட்டத்தை பிரித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் திருவேங்கடம் வட்டம் உருவாக்கப்பட்டது.

அமைவிடம்[தொகு]

இப்பெரூராட்சி திருநெல்வேலியிலிருந்து 80 கிமீ தொலைவிலும்; கோவில்பட்டியிலிருந்து 25 கிமீ தொலைவிலும்; சங்கரன்கோவிலிருந்து 18 கிமீ தொலைவிலும்; சிவகாசியிலிருந்து 28 கிமீ தொலைவிலும் உள்ளது. சங்கரன்கோவில் இதன் அருகமைந்த தொடருந்து நிலையம்]] ஆகும்.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

15.60 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 30 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2368 வீடுகளும், 8337 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]

ஆறுகள்[தொகு]

திருவேங்கடம் ஊரில் நிட்சேப நதி (வைப்பாறு )பாய்கிறது. இவ்வாற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்று கட்டப்பட்டு அந்த நீர் கீழத்திருவேங்கடத்தின் கூத்தாடி குளத்துக்கு கால்வாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

வழிபாட்டுத் தலங்கள்[தொகு]

 • யோக ஆஞ்சநேயர் திருக்கோவில்
 • அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ( மதாங்கோவில்)
 • மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் கோவில் (சிவன் கோவில்)
 • பெருமாள் கோவில்
 • படிக்காசு விநாயகர் கோவில்
 • காளியம்மன் கோவில்
 • முப்பிடாரி அம்மன் கோவில்
 • வனப்பேச்சியம்மன் கோவில
 • அய்யனார் கோவில்.

கல்வி நிலையங்கள்[தொகு]

 • ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
 • சி.எஸ்.ஐ துவக்கப்பள்ளி
 • அரசு மேல்நிலைப் பள்ளிகள் (தமிழ் & ஆங்கிலம் பயிற்று மொழிகள்)

தனியார் பள்ளிகள் (ஆங்கில வழி மட்டும்)[தொகு]

 • கலைவாணி மெட்ரிகுலேசன் பள்ளி
 • கம்மவார் மெட்ரிகுலேசன் பள்ளி

ஆதாரங்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. திருவேங்கடம் பேரூராட்சியின் இணையதளம்
 4. திருவேங்கடம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
 5. Thiruvenkadam Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவேங்கடம்&oldid=3068728" இருந்து மீள்விக்கப்பட்டது