வெற்றிடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வெற்றிடம் (vacuum) என்பது எந்த ஒரு பொருளும் இல்லாத இடம் ஆகும். பொதுவாக இயற்பியல் ஆய்வகங்களில் காற்றை நீக்குவதன் மூலம் வெற்றிடம் உருவாக்கப்படுகிறது. பிரபஞ்ச வெளி நாம் நினைப்பது போல வெற்றிடம் அன்று. ஏனெனில் அங்கேயும் சிறு சிறு பொருட்துகள்கள் உள்ளன. வெற்றிடத்தில் ஒளி பயணிக்கும், ஒலியோ பயணிக்க இயலாது. ஏனெனில் நெட்டலையான ஒலி பரவ திட, திரவ, வாயு ஊடகமொன்று அவசியம் தேவை.

இயற்கை வெற்றிடத்தை வெறுக்கும் என்பது இயற்பியலில் அனைவருமறிந்த ஒன்றாகும். வெற்றிடத்தின் அரண்கள் ஊடுருவக் கூடியதாய் இருப்பின் அது பொருள்களால் நிரப்பப்படும். இத் தத்துவமே உறிஞ்சி உபகரணங்கள் (suction apparatus), தூய்மையாக்கிகள் (vaccum cleaner) ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

குத்துமதிப்பாக, வளிமண்டல அழுத்தத்தில் இருந்து மிகமிகக் குறைவான அழுத்தம் கொண்ட ஒரு பகுதியை வெற்றிடம் என்று சொல்லலாம்.[1]. இயற்பியலாளர்கள் தங்களது உரைகளில் பல சமயங்களில் முற்றிலும் வெறுமையாய் இருக்கிற 'முழு' வெற்றிடம் பற்றிப் பேசுவார்கள். அதனையே பொதுவாக வெற்றிடம் என்பர். சோதனைக்கூடத்திலோ, விண்வெளியிலோ காணக்கூடிய அரைகுறை வெற்றிடத்தைப் 'பகுதி வெற்றிடம்' என்பார்கள். ஆனால், பொறியியலாளர்களும், பயன்பாட்டு இயற்பியலாளர்களும் வெற்றிடம் என்று குறிக்கும்போது, அது, வளிமண்டல அழுத்தத்தினும் குறைவான அழுத்தம் கொண்ட எந்தப் பகுதியையும் குறிக்கும். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Chambers, Austin (2004). Modern Vacuum Physics. Boca Raton: CRC Press. ISBN 0-8493-2438-6. OCLC 55000526. [page needed]
  2. Harris, Nigel S. (1989). Modern Vacuum Practice. McGraw-Hill. p. 3. ISBN 0-07-707099-2. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெற்றிடம்&oldid=2284005" இருந்து மீள்விக்கப்பட்டது