நெட்டலை
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அலை பரவும் திசைக்கு இணையாகவோ அவற்றின் திசையிலோ, ஊடகத்திலுள்ள துகள்கள் அதிர்வுறுவதால் உண்டாகும் அலைகள் நெட்டலைகள் (Longitudinal wave) எனப்படும். ஒலி அலைகள் காற்றிலோ வாயுவிலோ நெட்டலைகளாகப் பரவுகின்றன
ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும் போது நெருக்கமும் நெகிழ்வும் உருவாகின்றன. ஊடகத்தின் வழியே பரவும் நெட்டலைகளில், நெருக்கம் என்பது அதிக அழுத்தம் உள்ள பகுதி. நெகிழ்வு என்பது குறைந்த அழுத்தம் உள்ள பகுதி.