தூசுறிஞ்சி


நிலத்தில் காணப்படும் சிறு குப்பைகளையும் தூசியையும் உறிஞ்சி ஒரு பைக்குள் சேகரிக்கும் இயந்திரம் தூசி உறிஞ்சி ஆகும். ஆங்கிலத்தில் vacuum cleaner என்ற சொல்லுக்கு தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலி வெற்றிடத் தூய்மிப்பு என்றும் நேரடி மொழி பெயர்ப்பு தருகிறது. இப்பொறியைப் பயன்படுத்துவதற்கு முன்னர், துடைப்பத்தைக் கொண்டு சுத்தம் செய்தனர். இன்றும், இந்திய வீடுகளில் அதிக அளவில், துடைப்பம் பயன்படுத்தப் படுகிறது.
பொதுவாக நிலத்திற்கு கம்பளம் (carpet) இடப்பட்ட வீடுகளில் இது பயன்படுகின்றது. தானியங்கு தூசி உறிஞ்சிகளும் தற்போது விற்பனையில் உள்ளன.
வரலாறு[தொகு]
1996 ஆம் ஆண்டு ஜேம்ஸ் டைசன் என்பவர் வெற்றிட தூசுறிஞ்சியைக் கண்டுபிடித்தார். சுவீடன் நாட்டைச் சேர்ந்த எலக்ட்ரோலக்ஸ் எனும் நிறுவனம் அவரிடமிருந்து அதன் உரிமையைப் பெற்றுச் சந்தையில் அறிமுகப்படுத்தியது. 2001 ஆம் ஆண்டு டைசன் எனும் பிரிட்டிஷ் நிறுவனம் DC06 எனும் தனியங்கி வெற்றிட தூசுறிஞ்சியை உருவாக்கியது. இதை ரோபோட் வாக்யூம் கிளீனர் என்று அழைக்கின்றனர். வட்டவடிவில் உள்ள இது தன்னகத்தே கணினியைக் கொண்டுள்ளது. இது வீட்டின் இண்டு இடுக்குகளில் உதாரணத்துக்குக் கட்டில், சோபா, இருக்கை, நாற்காலிகள் ஆகியவற்றின் அடியில் புகுந்து புகுந்து, தூசிகளையும் குப்பைகளையும் உறிஞ்சி எடுத்து தரையைச் சுத்தமாக்கும் வல்லமை கொண்டது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ முகமது ஹுசைன் (9 திசம்பர் 2017). "வீட்டைச் சுத்தப்படுத்தும் ‘எந்திரன்’". கட்டுரை (தி இந்து தமிழ்). http://tamil.thehindu.com/society/real-estate/article21319547.ece. பார்த்த நாள்: 9 திசம்பர் 2017.