செங்கோட்டை வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செங்கோட்டை வட்டம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக செங்கோட்டை நகரம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் இலத்தூர், பண்பொழி, செங்கோட்டை என 3 குறுவட்டங்களும், 18 வருவாய் கிராமங்களும் உள்ளன. [2]

வரலாறு[தொகு]

1956 வரை கேரள மாநில அரசின் கீழ் இருந்தது. இங்கு வாழும் மக்களின் தாய்மொழி தமிழ். மேலும் கேரள அரசால் இப்பகுதியின் வளர்ச்சி தடுக்கப்பட்டது. இதைக் கண்டித்து நாகர்கோவிலைச் சேர்ந்த மார்ஷல் நேசமணி, கஞ்சன் நாடார், சிதம்பரம் பிள்ளை நாடார் ஆகியோருடன் சேர்ந்து செங்கோட்டை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின் தமிழக முதல்வர் காமராஜர் முயற்சியால் இப்பகுதி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கோட்டை_வட்டம்&oldid=2577164" இருந்து மீள்விக்கப்பட்டது