ஆலங்குளம் (தென்காசி மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆலங்குளம் (திருநெல்வேலி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆலங்குளம்
—  சிறப்பு நிலை பேரூராட்சி  —
ஆலங்குளம்
இருப்பிடம்: ஆலங்குளம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°52′N 77°30′E / 8.87°N 77.5°E / 8.87; 77.5ஆள்கூறுகள்: 8°52′N 77°30′E / 8.87°N 77.5°E / 8.87; 77.5
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் ஆலங்குளம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ச. கோபால சுந்தரராஜ், இ. ஆ. ப
சட்டமன்றத் தொகுதி ஆலங்குளம்
சட்டமன்ற உறுப்பினர்

பால் மனோஜ் பாண்டியன் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

20,948 (2011)

1,704/km2 (4,413/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

12.29 சதுர கிலோமீட்டர்கள் (4.75 sq mi)

127 மீட்டர்கள் (417 ft)

இணையதளம் www.townpanchayat.in/alangulam


ஆலங்குளம் (Alangulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டத்தில் உள்ள சிறப்பு நிலைப் பேரூராட்சி ஆகும்.[3]இவ்வூரில் ஆலங்குளம் தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 5,796 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 20,948 ஆகும்.

அருகமைந்த நகரங்கள்[தொகு]

ஆலங்குளத்திற்கு அருகமைந்த பாவூர்சத்திரம் தொடருந்து நிலையம் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் அருகமைந்த ஊர்கள் முறையே: கிழக்கில் திருநெல்வேலி 38 கி.மீ.; மேற்கில் தென்காசி 24 கி.மீ.; வடக்கில் சங்கரன்கோவில் 48 கி.மீ.; தெற்கில் அம்பாசமுத்திரம் 20 கி.மீ. வடமேற்குப் பகுதியில் சுரண்டை 17 கி.மீ.

போக்குவரத்து[தொகு]

ஆலங்குளம் நகரானது திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. எனவே நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஆலங்குளம் வழியாகச் செல்கின்றன. திருநெல்வேலி மற்றும் தென்காசி நகருக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் தூத்துக்குடி, திருச்செந்தூர், சங்கரன்கோவில், புளியங்குடி, சுரண்டை, கடையநல்லூர், செங்கோட்டை, பாபநாசம், முக்கூடல், அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், கடையம் பகுதிகளுக்கும் நேரடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரள மாநில புனலூர், கொல்லம், கோட்டயம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம் பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன. சென்னை, திருப்பூர் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் தனியார் ஆம்னி பேருந்துகள் சென்னை, கோவை, பெங்களூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

12.29 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 130 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 8°52′N 77°30′E / 8.87°N 77.5°E / 8.87; 77.5 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 127 மீட்டர் (416 அடி) உயரத்தில் இருக்கின்றது.

தொழில்[தொகு]

ஆலங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் விவசாயம் மற்றும் பீடி சுற்றுதல் பிரதான தொழிலாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. ஆலங்குளம் பேரூராட்சியின் இணையதளம்
  4. "ஆலங்குளம் பேரூராட்சியின் இணையதளம்". 2019-03-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-03-16 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Alangulam". Falling Rain Genomics, Inc. ஜனவரி 30, 2007 அன்று பார்க்கப்பட்டது.